மைத்திரிக்கு திருடர்களுடன் நிற்க முடியாது: தம்பர அமில தேரர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு திருடர்களுடன் இணைந்து நிற்க முடியாது என சமூக நியாயத்திற்கான பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சங்கத்தின்...


dampara_amila_thero_001

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு திருடர்களுடன் இணைந்து நிற்க முடியாது என சமூக நியாயத்திற்கான பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.
தூய்மையான அரசியல்வாதிகளை அடுத்த நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மிகவும் மரியாதைக்குரியவர்களை அடுத்த பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு அனுப்பவே மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
எத்தனோல் வியாபாரிகள், மோசடியாளர்கள், திருடர்கள், நாட்டின் வளங்களை கொள்ளையிட்டவர்கள் மற்றும் கொலை குற்றவாளிகள் அல்லாத நபர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பவே மக்கள் முடிவு செய்துள்ளனர்.

இவ்வாறான நிலையில், மகிந்த ராஜபக்சவுக்கு தேர்தல் போட்டியிட வாய்ப்பு கொடுத்தல் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு திருடர்களுடன் அணி வகுக்க முடியாது.
இதனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் பதவியில் இருந்து விலகி, மகிந்த ராஜபக்சவின் தேர்தல் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கியிருக்குமாறு கோரிக்கை விடுக்க விரும்புகிறோம்.
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலிலும் திருடர்களுடனேயே இருந்தார், இதனை புரிந்து கொண்டே மக்களை அவரை தோற்கடித்தனர் என தம்பர அமில தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Related

தலைப்பு செய்தி 1619216491456598144

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item