ஐ.தே.கவின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் கண்டியில் நடைபெறவுள்ளது
எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் பிரசாரப் பணிகளை எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்து...
https://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_238.html
இதன் அடிப்படையில் கட்சியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் கண்டியில் நடத்தப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கட்சியின் விசேட சம்மேளன கூட்டம் எதிர்வரும் 11 ஆம் திகதி கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதன்போது பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள பொதுத் தேர்தலுக்கு ஐக்கிய தேசியக் கட்சி கிராம மற்றும் நகர மட்டத்தில் தயாராகி வருகின்றது.
இந்நிலையில் வேட்புமனுத் தாக்கல் எதிர்வரும் 13 ஆம் திகதி பூர்த்தியாகவுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசாரப் பணிகள் எதிர்வரும் 14 ஆம் திகதி கண்டியில் கட்சியின் தலைவரும் ,பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
- See more at: http://www.tamilwin.com/show-RUmtyHTbSUeu3D.html#sthash.lqryuBvc.dpuf

