பன்சலைக்கும் கோயிலுக்கும் பள்ளிக்கும் சென்றேன்...

எனது மனது தெளிவாக இருக்கிறது...! "உண்­மையில் எனக்குள் மன அமை­தியை உணர்­கிறேன் என்­றாலும் ஓய்­வற்ற தன்மை என்றால் குறை­ய­வில்லை. முன்­பெல...

எனது மனது தெளிவாக இருக்கிறது...!
"உண்­மையில் எனக்குள் மன அமை­தியை உணர்­கிறேன் என்­றாலும் ஓய்­வற்ற தன்மை என்றால் குறை­ய­வில்லை. முன்­பெல்லாம் நான் ஓய்­வின்றி செயற்­பட்டுக் கொண்­டி­ருந்தேன். அந்த நிலை தற்­போது சிறிது குறைந்­துள்­ளது. கிரா­மத்தில் இருந்தேன். மக்­களை நேருக்கு நேர் சந்­தித்துப் பேசினேன். எனது கிரா­மத்­துக்கு மக்கள் வரு­கி­றார்கள். நான் பன்­ச­லைக்குச் செல்­கிறேன். கோயி­லுக்குச் செல்­கிறேன். பள்­ளிக்குச் செல்­கிறேன். மிகவும் சுதந்­தி­ர­மான மனது கிடைத்­துள்­ளது."

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ பாரா­ளு­மன்ற தேர்­தலில் கள­மி­றங்­கி­ய­தை­ய­டுத்து அர­சியல் களம் சூடு பிடித்­துள்­ளது. தினமும் திடீர் திருப்­பங்கள் மக்­களைத் திகைக்க வைக்­கின்­றன. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு எதி­ரா­கவும் பல சவால்கள் விடுக்­கப்­ப­டு­கின்­றன. அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்­ப­டு­கின்­றன. இந்­நி­லையில் லங்­கா­தீப வார பத்­தி­ரி­கைக்கு மஹிந்த ராஜபக் ஷ வழங்­கிய நேர்­கா­ணலை எமது வாச­கர்­க­ளுக்­காக இங்கு மீள் பிர­சுரம் செய்­கிறோம்.

என்னைப் பற்றி தவ­றான கருத்­துகள் முஸ்­லிம்கள் மத்­தியில் பரப்­பப்­பட்­டன.தமது சம­யத்­துக்கும் சமூ­கத்­துக்கும் எதி­ரா­னவர் என்று எவ­ரையும் நினைத்து விட்டால் அது மிகவும் பாதிப்பை ஏற்­ப­டுத்தும். அது அரச தலை­வ­ரையும் பாதிக்கும். முஸ்­லிம்கள் என்­னி­லி­ருந்தும் தூர­மா­கி­ய­தற்கு தவ­றான பிரச்­சா­ரங்­களே காரணம் என்­கிறார் மஹிந்த ராஜபக் ஷ அவ­ரது முழு­மை­யான நேர்­கா­ணலை இங்கு தரு­கிறோம்.

Q : ஜனா­தி­பதித் தேர்­தலில் நீங்கள் தோற்றும் போய் 7 மாதங்கள் கடந்து விட்­டன. இந்தக் கடந்து போன 7 மாதங்­களும் எவ்­வாறு அமைந்­தன.இந்­நாடு ஸ்தம்­பித்து விட்­ட­தாக எனக்குத் தெரிந்­தது. அபி­வி­ருத்­திகள் நிறுத்­தப்­பட்­டு­விட்­டன. வேலை­யின்மை அதி­க­ரித்து விட்­டது. இந்­நாட்டின் வர்த்­த­கர்­க­ளி­லி­ருந்து விவ­சா­யிகள் வரை தொழி­லா­ளர்கள் வரை அனை­வரும் கஷ்­டங்­க­ளுக்­குள்­ளா­கி­யி­ருக்­கி­றார்கள்.


Q : உங்­க­ளது தனிப்­பட்ட வாழ்க்­கையில் ஏதும் மாற்­றங்கள் ஏற்­பட்­டுள்­ள­தாக நீங்கள் உணர்­கி­றீர்­களா?
உண்­மையில் எனக்குள் மன அமை­தியை உணர்­கிறேன் என்­றாலும் ஓய்­வற்ற தன்மை என்றால் குறை­ய­வில்லை. முன்­பெல்லாம் நான் ஓய்­வின்றி செயற்­பட்டுக் கொண்­டி­ருந்தேன். அந்த நிலை தற்­போது சிறிது குறைந்­துள்­ளது.

கிரா­மத்தில் இருந்தேன். மக்­களை நேருக்கு நேர் சந்­தித்துப் பேசினேன்.

எனது கிரா­மத்­துக்கு மக்கள் வரு­கி­றார்கள். நான் பன்­ச­லைக்குச் சென்றேன். கோயி­லுக்குச் சென்றேன். பள்­ளிக்குச் சென்றேன். இதனால் எனது மனது தெளிவாக இருக்கிறது.


Q : மக்கள் மாற்­ற­மொன்­றையே கேட்­டார்கள். அந்த மாற்றம் உங்­க­ளுக்கு கிடைத்­தது?
இல்லை. அந்த மாற்­ற­மல்ல. நாட்டு மக்­க­ளுக்கு கிடைத்த மாற்றம் எனக்குக் கிடைத்­துள்­ள­தாக உணர்­கிறேன். அதுதான் உண்மை. ஏற்­பட்ட மாற்றத்தினால் தான் நாட்டின் அபி­வி­ருத்­திகள் தடைப்­பட்டு விட்­டன.

பழி­வாங்கல் வேகம் அதி­க­ரித்­துள்­ளது. நாடு அழி­வுக்­குள்­ளாகி விட்­டது.

மக்கள் இந்த மாற்­றத்தை இப்­போது உணர்­கி­றார்கள். நானும் உணர்­கிறேன். மோட்டார் சைக்­கிள்­களை நாம் ஜப்­பா­னி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­ய­வில்லை அல்­லவா?


Q : நீங்கள் தோல்­வியைத் தழுவி 7 மாதங்கள். தோல்­வியைப் பற்றிப் நினைத்துப் பார்க்க இந்தக் காலம் போது­மா­னது. நீங்கள் உங்கள் தோல்­வியை நினைத்துப் பார்த்­தீர்­களா?
தோல்­விக்­கான கார­ணங்கள் அனை­வ­ருக்கும் தெரி­கி­றது. நான் எத்­தனை மாவட்­டங்­களில் வெற்றி பெற்றேன்? ஆச­னங்­களின் எண்­ணிக்­கையைப் பாருங்கள். இது தொடர்பில் நான் திருப்­தி­யு­று­கிறேன்.

பல்­வேறு இன மக்­களின் மனங்­களில் விதைக்­கப்­பட்ட தவ­றான கருத்­துக்கள் எனது தோல்­விக்கு காரணம் எனலாம். இதே­வேளை வடக்கு கிழக்கு வாக்­குகள் தான் கார­ண­மாக அமைந்­தது.

எனக்கு கிடைத்த வாக்­கு­களை நோக்­கினால் மக்கள் என்­மீது நம்­பிக்கை வைத்­தி­ருக்­கி­றார்கள் என்பது தெளிவாகும்.


"முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை நாங்கள் கட்­டு­ப­டுத்த முயற்­சித்தோம் என்­றாலும் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான நட­வ­டிக்­கைகள் மிகவும் சூட்­சும­மான முறையில் மேற்­கொள்­ளப்­பட்­டதால் அவற்றைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யாமற் போனது. பொய்­யான கருத்­துகள் பிரச்­சாரம் செய்­யப்­ப­டு­வதை கட்­டுப்­ப­டுத்­து­வது இல­கு­வான காரி­ய­மல்ல."

Q : ஏன் சிறு­பான்மை மக்­களின் வாக்­கு­களை உங்­களால் பெற்றுக் கொள்ள முடி­யாமற் போனது?
பொய் பிரச்­சா­ரங்­களை மேற்­கொண்­டார்கள் அல்­லவா? நாம் வடக்கை அபி­வி­ருத்தி செய்தோம்.தமிழ் டயஸ்­போரா தமிழ் மக்­களை பெரிதும் மாற்­றி­யி­ருந்தது.

யுத்தம் நடை­பெற்ற காலத்­தி­லி­ருந்த நிலைப்­பாட்­டிலே அவர்கள் தொடர்ந்தும் இருந்­தார்கள். மறந்து விடா­தீர்கள். 2010இல் எனக்கு கிடைத்த வாக்­கு­களை விட இரு மடங்கு வடக்­கி­லி­ருந்து கிடைத்­துள்­ளது.


Q : முஸ்லிம் மக்கள் உங்­க­ளி­லி­ருந்தும் தூர­மா­கி­வி­டு­வ­தற்கு பொது­பல சேனா போன்ற அமைப்­புகள் கார­ண­மாக இருந்­தன என்று நீங்­களே கூறி­யி­ருக்­கி­றீர்கள்?
அதைத்தான் நான் சொன்னேன். என்னைப் பற்றி தவ­றான கருத்­துகள் பரப்­பப்­பட்­டன. தமது சம­யத்­துக்கு எதி­ரா­னவர் எமது சமூ­கத்­துக்கு எதி­ரா­னவர் என்று அச்­ச­மய மக்கள் நினைத்து விட்டால் அது மிகவும் பாதிப்பை ஏற்­ப­டுத்­து­வ­தாக அமையும்.

அது அரச தலை­வ­ரையும் பாதிக்கும்.

என் மீதி­ருக்கும் தனிப்­பட்ட பிரச்­சி­னைக்கு அல்ல முஸ்லிம் மக்கள் என்­னி­ட­மி­ருந்து தூர­மா­கி­யது. தவ­றான பிர­ச்சா­ரங்­களே காரணம்.

Q : ஏன் நீங்கள் அவற்றைக் கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை.?
நாங்கள் கட்­டு­ப­டுத்த முயற்­சித்தோம் என்­றாலும் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான நட­வ­டிக்­கைகள் மிகவும் சூட்­சும­மான முறையில் மேற்­கொள்­ளப்­பட்­டதால் அவற்றைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யாமற் போனது.

பொய்­யான கருத்­துகள் பிரச்­சாரம் செய்­யப்­ப­டு­வதை கட்­டுப்­ப­டுத்­து­வது இல­கு­வான காரி­ய­மல்ல.

Q : நீங்கள் தோற்­க­டிக்­கப்­பட்­டது உங்­க­ளது தவ­றினால் அல்ல என்று நம்­பு­கி­றீர்­களா?
இப்­ப­டித்தான் நாங்கள் உண்­மை­யான கதையைப் பேசு­வோமே. அமெ­ரிக்கா இப்­போது சொல்­கி­றது..... இந்த மாற்­றத்­துக்கு அவர்கள் பங்­கு­தா­ரர்­க­ளா­னார்கள் என்று. அந்­நாட்டின் தலை­வர்கள் இதை ஏற்றுக் கொண்­டுள்­ளார்கள்.

அடுத்து இங்­கி­லாந்து ஆட்சி மாற்­றத்­துக்கு அவர்­களும் பங்­கு­தா­ரர்கள் ஆனார்கள் என்று தெரி­விக்­கி­றது.

இவர்கள் பகி­ரங்­க­மாக இதைத் தெரி­வித்­த­வர்கள். பகி­ரங்­க­மாக தெரி­விக்­காத கோஷ்­டி­யொன்றும் உள்­ளது. அவ்­வா­றான நாடுகள் உள்­ளன. இவ்­வாறு பலம் பொருந்­திய சக்­திகள் ஒன்­றி­ணைந்து இந்த திட்­டத்தை அமுல்­ப­டுத்­தி­யுள்­ளன.

இது எனது தவ­று­க­ளினால் நிகழ்ந்­த­தல்ல.

Q : நீங்கள் சீன அர­சாங்­கத்­துடன் கொண்­டி­ருந்த நெருங்­கிய உறவின் கார­ண­மாக உலகின் அநேக நாடுகள் உங்­க­ளுக்கு எதி­ரி­க­ளா­யின?
அது முற்றும் தவ­றான கருத்­தாகும். நான் சீனா­வுடன் நெருங்­கிய உறவு கொள்­ள­வில்லை. எனது நாட்­டு­டனே நெருங்­கி­யி­ருந்தேன். அது எனது கடமை. நான் யாருக்கு எனது கட­மையை நிறை­வேற்ற வேண்டும்?

எனது நாட்­டுக்­காகத் தானே சேவை செய்­ய­வேண்டும்.

கடமை உணர்­வுடன் இருக்க வேண்டும். எனது நாட்டு மக்­களின் நன்­மைக்­காக நாட்டை அபி­வி­ருத்தி பாதையில் இட்டுச் செல்லும் கடமை எனக்­கி­ருந்­தது. இந் நாட்­டுக்கு அபி­வி­ருத்­திகள் தேவை என்­பதை நான் உணர்ந்தேன். அபி­வி­ருத்தி இல்­லா­விட்டால் மக்­க­ளிடம் பணம் இல்­லா­விட்டால் அவர்கள் வறி­ய­வர்­க­ளாகி விடு­வார்கள்.

தொழி­லற்­ற­வர்­க­ளாகி விடு­வார்கள் அபி­வி­ருத்தி இல்­லா­விட்டால் நாட்­டுக்கு மின்­சாரம் இல்­லா­விட்டால் மக்கள் தெருக்­களில் உள்ள குழி­களில் விழுந்து விழுந்து பய­ணிக்க வேண்­டி­யேற்­படும்.

தகவல் தொழி­நுட்­பத்தை உச்ச நிலைக்கு கொண்டு வந்தோம். இந்த அபி­வி­ருத்­தி­களைத் தான் உலக நாடு­க­ளுடன் சேர்ந்து மேற்­கொண்டோம்.

Q : நீங்கள் இந்­தி­யா­வுடன் கோபித்து கொண்­டீர்கள் ?
இல்லை.


இந்­தி­யா­வுடன் கோபித்துக் கொள்­ள­வில்லை ஒன்றை நினைவில் வைத்து கொள்­ளுங்கள். எமக்­கெ­தி­ரான சக்­திகள் அனைத்தும் ஒன்­றாக வந்த போது அந்த சக்­திகள் மேற்­கொண்ட பிர­ச்சா­ரங்­க­ளுக்கு நாங்கள் சரி­யாக பதி­ல­ளிக்­க­வில்­லை­யென்றே நான் நினைக்­கிறேன். அந்த இடத்திலே எமது பல­வீனம் இருக்­கி­றது.

எந்த நாடென்­றாலும் அழுத்­தங்­க­ளுக்கு அடிப்­ப­ணிந்­து­விட முடியும்.

இந்­தியா எம்­முடன் கோபித்து கொண்­டது என நான் ஏற்றுக் கொள்ள போவ­தில்லை.

தென்­னிந்­தி­யாவின் அர­சியல் நிலை­மைக்கு என்னால் மாறிக் கொள்ளப் முடி­யாது. என்­றாலும், என்ன இல்­லாமற் போனாலும் எனது நாட்டைக் காட்டி கொடுக்க முடி­யாது.

எமது நாட்டின் அபி­வி­ருத்­திக்கு இந்­தியா பெரும் பங்­காற்­றி­யுள்­ளது.

இன்று எமது நாட்டில் இந்­திய சாமான்கள் அல்­லவா இருக்­கின்­றன. இப்­போ­தைய வெளி­நாட்டுக் கொள்­கையை உலகம் ஏற்று கொண்­டுள்­ளதா?

இன்று வரை எத்­தனை நாடுகள் எம்­முடன் முரண்­பட்டுக் கொண்­டுள்­ளன? மேலைத்­தேய நாடுகள் உத­விக்­கு­வரும் என்ற நம்­பிக்­கை­யி­லேயே பல நாடு­க­ளுடன் கோபித்துக் கொண்­டுள்­ளனர்.

நாங்கள் பிரி­வு­ப­டாத மக்கள் பிரிவு படாத நாடு ஆனால் இன்று பிரி­வு­பட்ட மக்கள் பிரி­வு­பட்ட நாடு இதுதான் வேறு­பாடு.

Q : ஜன­வரி 8ஆம் திகதி தோல்­விக்கு ராஜபக் ஷ சகோ­த­ரர்கள் பொறுப்புக் கூற வேண்­டு­மென நீங்கள் நினைக்­கி­றீர்­களா?
தோல்­வி­யுற்றால் எப்­போதும் எவர் மீதா­வது பழி சுமத்­த­ப­டு­கி­ற­தல்­லவா? 1977 இல் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி தோல்­வி­யுற்ற போது அத்­தோல்வி இலங்­க­ரத்ன மீது சுமத்­தப்­பட்­டது.

பீலிக்ஸ் டயஸ் பண்­டா­ர­நா­யக்க மீது சுமத்­தப்­பட்­டது. அவர்கள் தோல்­விக்கு பொறுப்பு கூற வேண்டும் என்­றார்கள். பச்சை பொய் சொன்­னார்கள். இந்தப் பொய் மிகவும் கால­தா­ம­த­மா­கியே புரிந்­தது. அடுத்­த­வர்கள் செய்த தவ­று­களை இப்­போது எவரும் கூறு­வ­தில்லை

இருக்­கும்­போது எல்­லோ­ருக்கும் ஏசு­வார்கள். தோற்­றதன் பின்பு ஒருவர் அல்­லது இரு­வரை மாத்­திரம் தோல்­விக்கு கார­ண­மாக மையப்­ப­டுத்திக் கொள்­வார்கள். காய்க்கும் மரத்­துக்­கு­தானே கல் எறி­யப்­படும்.

இது உலகின் சுபாவம்.

Q : நீங்கள் தேசிய சொத்­துக்­களை கள­வெ­டுத்­தி­ருக்­கலாம் கோடிக்­க­ணக்­கான பணத்தை வெளி­நாட்டில் வைப்­பி­லிட்­டீர்கள் என்று குற்­றச்­சாட்டு இருக்­கி­றது.
பைல் கட்­டு­க்களை கொண்டு வந்­தல்­லவா காட்­டி­னார்கள். காட்­டிய அந்த பைல் கட்­டு­க­ளி­லி­ருந்து தேடிக் கொள்ள முடி­யு­மல்­லவா? வங்­கி­க­ளி­லி­ருந்து தேடி கண்டு பிடித்துக் கொள்­ளலாம் அல்­லவா?

இவர்கள் கூறு­வது பில்­லியன் 18 ஐப் பற்­றி­யல்­லவா? 18 பில்­லியன் அல்ல குறைந்­தது. 1.8 பில்­லி­யனை தேடிக் கண்டு பிடித்துக் கொண்டு வரச் சொல்­லுங்கள்.

அதிகம் தேவை­யில்லை 10 டொலர் தேடிக் கொண்டு வரச் சொல்­லுங்கள் இது தான் அர­சியல் சேறு பூசல் என்று சொல்­லு­வது.

Q : வெளி­நாட்­டி­லுள்ள சொத்­துக்­களை தேடிக் கண்­டு­பி­டிக்க நீண்ட காலம் செல்லும் என வெளி­நாட்டு அமைச்சர் மங்­கள சம­ர­வீர கூறி­யுள்ளர்?
இது பச்சை பொய். உலகில் எந்த கணக்­கையும் எந்த இடத்­தி­லி­ருந்தும் பார்த்துக் கொள்ளும் வகையில் இன்று தொழி­நுட்பம் முன்­னே­றி­யுள்­ளது. அமெ­ரிக்­கா­வுக்குத் தெரி­யாமல் களவில் டொலரில் கொடுக்கல் வாங்கல் செய்ய செய்ய முடி­யுமா?

ஒரு பொத்­தானை அழுத்திக் கண்­டு­பி­டிக்­கலாம். இவர்கள் எனது பெயர் இருப்­ப­தாக கூறி சுவீஸ் வங்கி அதி­கா­ரி­களை அழைத்து வந்­தார்கள். பெயர் பட்­டி­யலை டைம்ஸ் பத்­தி­ரி­கையில் வெளி­யிட்­டி­ருந்­தார்கள்.

அந்தப் பட்­டி­யல் என தல்ல என்­னுடன் தொடர்­பு­பட்­ட­வர்­க­ளதோ எனது பகு­தியைச் சேர்ந்­த­வர்­க­ளதோ பெயர் இருக்­க­வில்லை. பெயரைச் சொல்லி மனி­தர்கள் மீது சேறு பூசு­வது இல­கு­வா­னது. எனக்கு வேறு எதுவும் சொல்ல முடி­யா­தல்­லவா?

அபி­வி­ருத்தி செய்­ய­வில்லை என்று கூற­மு­டி­யாது. பாதைகள் அமைத்­தது பிழை­யா­னது என்றும் சொல்ல முடி­யாது. அதனால் தான் இவ்­வாறு சேறு பூசு­கி­றார்கள்.

Q : ஆனால் அபி­வி­ருத்தி வேலை­க­ளிலும் பாதை நிர்­மா­ணங்­க­ளிலும் கமிஷன் பெற்­ற­தாக குற்­றச்­சாட்டு இருக்­கி­றதே?
அதைத்தான் நான் சொல்ல முயற்­சித்தேன். செய்து முடித்த நல்ல வேலை­களை தவ­றா­னது எனக் கூற முடி­யாது. ஆனால் செய்த நல்ல வேலைக்குள் அவ்­வா­ற­னவை (கமிஷன்) இருந்­த­தாக கூறு­கி­றார்கள்.

இப்­படிக் கூறித்தான் மக்­களை தவ­றான வழிக்கு இட்டுச் சென்­றார்கள். மத்­திய வங்­கியின் பிணை­முறி கொள்­ளையைப் பாருங்களேன். அது ஒரு கொள்ளை.

அது களவு அல்ல. நான் அதை களவு என்று சொல்­ல­வில்லை.

அது கொள்ளை. இது நேர­டி­யாக மக்­களைப் பாதித்த கொள்ளை. ஒட்டு மொத்த நிதிச் சந்­தையும் இதனால் மாற்­ற­ம­டைந்­தது.

இதற்கு பொறுப்புக் கூற­வேண்­டி­ய­வர்கள் யார்? கோப் கமிட்டி தலைவர் டியூ குண­சே­கர இது­வரை காலம் வழங்­கிய அறிக்கை நல்­லது. ஆனால் இம்­முறை வழங்­கிய அறிக்கை பிழை­யா­னதாம்.

நான் சிறு வய­தி­லி­ருந்தே டியூ குண­சே­க­ரவை அறிவேன். அவர் ஒரு கொள்கை வாதி. சர்­வ­தேச அனு­ப­வங்கள் உள்ள நேர்­மை­யா­னவர்.

என்­னு­டனும் அவர் பல தட­வைகள் சண்டை பிடித்­துள்ளார். அவ­ரது அறிக்­கையை ஏற்றுக் கொண்­டி­ருக்க வேண்­டு­மல்­லவா? பாரா­ளு­மன்­றத்­துக்கு வந்து சாட்­சி­ய­ம­ளித்­த­வர்­க­ளது சாட்­சி­யங்­களைக் கொண்டே அறிக்கை தயா­ரிக்­கப்­பட்­டது.

மத்­திய வங்கி பிணை­முறி ஊழல் சாட்­சி­ய­ம­ளித்­த­வர்­க­ளினால் அல்­லவா வெளியில் வந்­தது. ஐ.தே.கட்­சியில் உள்­ள­வர்­களும் கோப்பில் உள்­ளார்கள். ஏன் அவர்கள் அறிக்­கையை ஒளித்­தார்கள்? எங்­க­ளுக்­குள்ள பிரச்­சினை இதுதான். இது ஒரு கொள்ளை. இது கொள்ளைக் கோஷ்டி.

Q : முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா ஏன் உங்­க­ளுடன் இத்­தனை கோபம் ?அதை அவ­ரிடம் கேட்க வேண்டும். எனக்கு எப்­படித் தெரியும்.

Q : என்­றாலும் உங்­க­ளுக்கு எதி­ராக சந்­தி­ரிக்கா குற்றச் சாட்­டு­களை முன் வைக்­கி­றாரே.?
நான் இவற்றை பெரி­து­ப­டுத்திப் பார்க்­க­வில்லை. அவர் கூறு­ப­வைகள் மக்­க­ளுக்கு விளங்­காமல் இருப்­பது போல் எனக்கும் விளங்­க­வில்லை.

இது எனக்குப் பிரச்­சி­னையே இல்லை.

Q : இரு வரு­டங்கள் இருக்­கும்­போது ஏன் ஜனா­தி­பதித் தேர்­த­லுக்குச் சென்­றீர்கள்?
நான் நினைத்தேன் அதி­க­மான அமைச்­சர்கள் எனக்குச் சொன்­னார்கள். பாரா­ளு­மன்ற தேர்­த­லுக்கு முன்பு எனது தேர்­தலை நடாத்தும் படி அது கொள்கை ரீதி­யான தீர்­மானம்.

Q : நீங்கள் தேர்­தலில் தோற்று விட்­டீர்கள். வீட்டில் ஓய்­வெ­டுக்க முடி­யு­மல்­லவா? மீண்டும் அர­சி­யலில் பிர­வே­சித்­தது அதி­கார மோகத்­துக்­கல்­லவா?
ரணில் விக்­கி­ர­ம­சிங்க எத்­தனை தட­வைகள் தோற்றார். 9 தட­வைகள் இம்­முறை அவர் பின்­க­தவால் வந்தார்.

அவர் வெற்­றி­பெற்று பிர­த­ம­ரா­க­வில்லை அல்­லவா? முன்பு அர­சியல் தலை­வர்கள் தோற்­றுப்போய் மீண்டும் போட்­டி­யி­ட­வில்­லையா? எத்­தனை பேர் எத்­தனை தடவை தோற்­றுப்போய் போட்­டி­யிட்­டுள்­ளார்கள்.

நான் ஒரு முறையே தோற்­றுள்ளேன். இரண்டு தட­வைகள் வெற்றி பெற்­றுள்ளேன். ஒரு முறை தோற்றால் வீட்டில் இரு என்­கி­றார்கள்.

Q : எனது கேள்வி. நீங்கள் மீண்டும் அர­சி­ய­லுக்கு வரு­வது நாட்டின் மீதுள்ள பற்­றி­னாலா. உங்கள் மீதுள்ள குற்­ற­சாட்­டு­களை மூடி மறைத்துக் கொள்­ளவா? அல்­லது அதி­காரம் இல்­லாது இருக்க முடி­யா­த­தற்கா?
நான் வீட்­டுக்குச் சென்று விட்டேன் அல்­லவா. மெத­மு­லையில் இருந்தேன்.

மக்கள் தான் என்னைத் தேடி வந்­த­ார்கள் நான் போக­வில்லை அல்­லவா! நான் பன்­ச­லை­க­ளுக்கே சென்றேன். மக்கள் தான் என்னைக் கேட்­கி­றார்கள். அதனால் தான் மீண்டும் அர­சி­ய­லுக்குள் நுழைந்தேன்.

Q : ஜன­வரி 8 ஆம் திகதி ராஜபக் ஷ கோஷ்­டி­யி­ட­மி­ருந்து நாட்டைக் காப்­பாற்­றி­விட்டோம் என்று கூறி­னார்கள். மீண்டும் இந்தக் கோஷ்­டியின் கைகளில் நாட்டை ஒப்­ப­டைக்­கவா முயற்­சிக்­கி­றீர்கள்?
இது முற்றும் தவ­றான கருத்து. அமைச்­ச­ர­வை­யினால் தான் அனைத்து தீர்­மா­னங்­களும் எடுக்­கப்­ப­டு­கி­றது.

அப்­ப­டி­யென்றால் ஒரு கோஷ்­டி­யினர் மாத்­திரம் நாட்டை ஆட்சி செய்­தார்கள் என்று குற்­றம்­சாட்ட முடியும். தீர்­மா­னங்கள் அமைச்­ச­ர­வையின் ஏகோ­பத்த முடி­வு­க­ளாகும்.

இவ்­வா­றான குற்­றச்­சாட்­டு­களை முன்­வைக்கும் அமைச்­சர்கள் அன்று இது பற்றி ஒரு வார்த்தை பேச­வில்லை அல்­லவா?

Q : ஆனால் அமைச்­சர்­க­ளுக்கு பேசு­வ­தற்கும் சுதந்­தி­ர­மி­ருக்­க­வில்லை?
இதனை நான் மறுக்­கிறேன். அப்­படி பேசு­வ­தற்கு இட­ம­ளிக்­காது இருக்­க­மு­டி­யுமா? நான் சமர்ப்­பித்த அமைச்­ச­ரவைப் பத்­தி­ரங்கள் கூட நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. நாங்கள் ஒன்­றாக இணைந்தே தீர்­மா­னங்­களை மேற்­கொண்டோம்.

Q : ஆனால் ராஜபக் ஷாக்கள்!
ஆம் ராஜபக் ஷாக்கள் இருந்­தார்கள் தான். ராஜபக் ஷாக்கள் அர­சியல் செய்­தார்கள். பஷில் அர­சி­யலில் இருந்தார்.

கோதா­பய மாத்­திரம் தான் அர­சி­ய­லுக்கு வெளி­யி­லி­ருந்து வந்தார். அவர் யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வர பங்­காற்­றி­யவர்.

அவ­ரது இய­லு­மையை வெளிப்­ப­டுத்­தினார். அன்று கொழும்பு இருந்த நிலை என்ன?-இன்­றி­ருக்கும் நிலை என்ன? மக்கள் ஏற்றுக் கொள்­கி­றார்கள். மிக­வே­க­மாக அபி­வி­ருத்­தி­ய­டைந்து முன்­னே­றிய சிறந்த நக­ர­மாக உலகம் ஏற்றுக் கொண்­டுள்­ளது.

இந்த நிலை­மையை உரு­வாக்­கி­யவர் யார்? வேலை செய்யக் கூடி­ய­வர்கள் வேலை செய்­கி­றார்கள்.

முடி­யா­த­வர்கள் விமர்­சிக்­கி­றார்கள். பண்­டார நாயக்­கா­வுக்கு என்­ன­வெல்லாம் கூறி­னார்கள். சந்­தி­ரிக்­கா­வுக்கு என்ன சொன்­னார்கள். குடும்ப மரம் என்­கி­றார்கள். மர­மொன்­றையும் வரைந்தார்கள். குடும்ப ஆட்சி என்­கி­றார்கள்.

சந்­தி­ரிக்கா நம்­பிக்கை வைத்­தி­ருப்­ப­வர்கள் தான் இவ்­வாறு அவ­ருக்கு எதி­ராக செயற்­பட்­டார்கள்.

ஜே.ஆருக்கும் குடும்ப ஆட்சி என்­கி­றார்கள். ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் இப்­ப­டித்தான். இந்த நாட்டின் அர­சி­யலில் குடும்பம் இருக்­கி­றது. இலங்­கையில் மாத்­தி­ர­மல்ல இந்­தி­யா­விலும் பாகிஸ்­தா­னிலும் குடும்ப ஆட்சி இருக்­கி­றது.

Q : நீங்கள் இவ்­வாறு பாதை அமைப்­பது நாமல் ராஜபக் ஷவுக்­கா­கவா?-
அப்­ப­டி­யொன்றும் இல்லை
. இந்த நாட்டில் அர­சியல் செய்யும் குடும்­பங்கள் உள்­ளன. வர்த்­தக குடும்­பங்கள் உள்­ளன. ஆனால் என்ன வேற்­றுமை என்றால் அரசியலில் தீர்மானங்களை மேற்கொள்வது மக்களே.

இப்போது எனக்கு நடந்ததும் இதுதான். என்னை வீட்டுக்கு அனுப்பினார்கள். என்னை போகச் சொன்னால் போய்விடுவேன் என்று நான் எப்போதும் கூறி வந்துள்ளேன்.

Q : ஆனால் ஜனவரி 9 ஆம் திகதி அதிகாலை அலரிமாளிகையில் சூழ்ச்சியொன்று நடந்ததாகவும் உங்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டதே?
இது பொய்யான பிரசாரம். நான் அங்கு மணிக்கணக்கில் இருக்கவில்லை.

முடிவுகள் வெளியிடப்படும் முன்பே நான் அங்கிருந்து சென்று விட்டேன்.

அனைத்து தேர்தல் முடிவுகளும் வெளியிடப்படுவதற்கு
8 அல்­லது 9 மணித்­தி­யா­லங்­க­ளுக்கு முன்பே அங்­கி­ருந்து சென்­று­விட்டேன்.

அதி­காலை 2½ மணிக்கே நான் கூறி­விட்டேன் நான் தோற்­று­விட்டேன் என்று

Q : நீங்கள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்­தீர்கள் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக அமைச்­ச­ராக இரு தடவை இருந்தீர்கள் இம்முறை தேர்­தலில் வென்றால் சாதா­ரண உறுப்­பி­ன­ரா­கவே பாரா­ளு­மன்றம் செல்­வீர்கள் மாற்­றத்தை விரும்­பு­கி­றீர்­களா?
எனக்கு எந்த மாற்­றங்­களும் தெரி­ய­வில்லை பாரா­ளு­மன்றம் எனக்கு மிகவும் பழக்­க­மான இடம் 40 வருட எமது அர­சியல் வாழ்வில் 9 வரு­டங்கள் தானே ஜனா­தி­பதி பதவி வகித்தேன். அது வரை பாரா­ளு­மன்­றத்தில் அல்லவா இருந்தேன்.

Q : இம்­முறை பாரா­ளு­மன்ற தேர்­தலில் வெற்­றி­பெ­று­வீர்­களா?
நிச்­சயம். வெற்றி நிச்­சயம் அன்­றி­ருந்த நிலை அல்ல இன்று. அன்று சிறு­பான்மை மக்கள் என்­னுடன் இருக்­க­வில்லை. இன்று யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து எத்­தனை பேர் என்­னுடன் உள்­ளார்கள்.

அதி­க­மானோர் யாழ்ப்­பா­ணத்தில் வடக்­கி­லி­ருந்து வரு­கி­றார்கள். இன்று அவர்­க­ளுக்கு நிலைமை விளங்­கு­கி­றது. முஸ்­லிம்­க­ளுக்கும் நிலைமை புரி­கி­றது மாற்றம் விளங்­கு­கி­றது. மாற்­றங்­களை ஏற்படுத்தியவர்களே இப்போது அதற்குப் புறம்பான மாற்றங்களை எதிர்பார்க்கிறார்கள்.

Q : நீங்கள் அமைச்சுப் பதவி வழங்கிய ஆனால் பிரதமர் பதவி வழங்காத மைத்திரி இன்று ஜனாதிபதி என்ன நினைக்கிறீர்கள்.
இன்று 19 ஆவது அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் இருக்கின்றன. பாராளுமன்றத்துக்கு அதிகாரம் அதிகமாகியுள்ளது. இதனால் மைத்திரியும் நானும் இணைந்து வேலை செய்வது கடினமான காரியமல்ல.

Q : ஜனாதிபதி தேர்தலில் உங்களுக்கு கிடைக்காத சிறுபான்மை மக்களின் வாக்குகள் பாராளுமன்றத் தேர்தலில் கிடைக்குமா?
ஆம் உண்மையாக எனக்கெதிராக வாக்களித்த அனைத்து மக்களும் என்ன நடந்தது என்பதை இப்போது புரிந்து கொண்டுள்ளார்கள். நாங்கள் சொல்வதைச் செய்பவர்கள் என்றும் செய்ததைச் சொல்பவர்கள் என்பதையும் மக்கள் உணர்ந்து விட்டார்கள். பொய் பிரச்சாரங்களுக்கு ஏமாற வேண்டாமென நான் மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

Q : நீங்கள் பிரதமர் பதவியை எதிர்பார்க்கிறீர்களா?
பிரதமரைத் தெரிவு செய்வது பாராளுமன்றத்தின் பெரும்பான்மை பலத்தினாலாகும். பெரும்பான்மை பலத்தை தெரிவு செய்வது மக்கள். நான் மக்கள் ஆணையையே எதிர்பார்க்கிறேன்.

Related

தலைப்பு செய்தி 6244881569600385385

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item