இலங்கையர் ஒருவரின் மனுவை ஆஸி. மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது!
இலங்கைக்கு திரும்பிச் சென்றால் அங்கு சித்திரவதைகளை எதிர்நோக்க நேரிடும் எனக் கூறி இலங்கைத் தமிழர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை அவுஸ்திரேலிய உய...
https://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_892.html
இலங்கைக்கு திரும்பிச் சென்றால் அங்கு சித்திரவதைகளை எதிர்நோக்க நேரிடும் எனக் கூறி இலங்கைத் தமிழர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை அவுஸ்திரேலிய உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்த இலங்கை தமிழர் 2010ம் ஆண்டு கடல் வழியாக படகு மூலமாக சென்று அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
மனுதார் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளது போல், அவருக்கு ஆபத்துக்கள் இருப்பது போன்ற கணிசமான அறிகுறிகள் இல்லை என்ற காரணத்தினால், அவரது மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இதே போன்ற வழக்கில் ஈரானிய குர்திஷ் இனத்தவர் ஒருவருக்கு அவுஸ்திரேலியாவில் பாதுகாப்பு அத்தியாவசியம் என்ற காரணத்தின் அடிப்படையில் தற்காலிக அகதியாக தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்த வழக்கை உதாரணமாக காட்ட இலங்கையர் முயற்சித்த போதிலும் அது தோல்வியடைந்துள்ளது.

