வடக்கில் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுக்க சீன நிறுவனங்கள் நிதியுதவி

வட பகுதிக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கத்தில் கிணறுகளை அமைக்க, இரு சீன நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இந்த திட்டத்திற்காக ...

வட பகுதிக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கத்தில் கிணறுகளை அமைக்க, இரு சீன நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
இந்த திட்டத்திற்காக சுமார் 14 ஆயிரத்து 400 அமெரிக்க டொலர்களை வழங்க இரு நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக சீன ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் ஐந்து குடிநீர் கிணறுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்கார் வீட்டா எனும் அமைப்பு மனிதாபிமான முறையில் உதவி செய்யுமாறு விடுத்த கோரிக்கைக்கமைய இந்நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்திய வருடங்களில் இலங்கை அபிவிருத்தியில் முன்னேற்றம் அடைந்துள்ள போதிலும் வட பகுதியில் சுத்தமான குடிநீருக்கான பிரச்சினை தொடர்ந்தும் காணப்பட்டு வருகின்றது என சீனா துறைமுக இலங்கை பகுதி நிறுவனத்தின் துணை பொது முகாமையாளர் டெங் போ தெரிவித்துள்ளார்.

குறித்த நிறுவனங்கள் இலங்கையர்களின் நன்மைக்காக பல்வேறு வகையிலும் தொடர்ந்தும் பங்களிப்பு செய்யும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related

தலைப்பு செய்தி 2422627075400486555

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item