நாளை மெதமுலனவில் கூட்டத்தை சேர்ப்பதற்காகவே பொய் கூறித் திரிகின்றனர். மகிந்த பிரதமர் வேட்பாளராக அறிவிக்கபட்டது உண்மையில்லை.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக நிறுத்த போவதாக கூறப்படுவதில் உண்மையில்லை என அமைச...


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக நிறுத்த போவதாக கூறப்படுவதில் உண்மையில்லை என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை வழங்குவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சொந்த கிராமமான மெதமுலனவில் நாளைய தினம் நிகழ்வொன்றை நடத்தவுள்ளவர்கள் அதற்கு கூட்டத்தை சேர்ப்பதற்காக இவ்வாறு கூறி வருகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி நாளைய தினம் மெதமுலனவில் விசேட அறிவிப்பொன்றை வெளியிடப் போவதாக கூறப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதியை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக நாளைய தினம் அறிவிக்க போவதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

இலங்கை 3698999155392784557

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item