விஷேட உரையாற்ற கொழும்பு சென்ற அப்துல் கலாம்!
இந்திய முன்னாள் ஜனாதிபதியும், சர்வதேச அளவில் புகழ்பெற்ற விஞ்ஞானியுமான அப்துல் கலாம் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் ஏற்பாட்டில் கொழ...
https://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_802.html
இந்திய முன்னாள் ஜனாதிபதியும், சர்வதேச அளவில் புகழ்பெற்ற விஞ்ஞானியுமான அப்துல் கலாம் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் ஏற்பாட்டில் கொழும்பில் நடைபெறவுள்ள சர்வதேச கருத்தரங்கில் சிறப்பு உரையாற்றுவதற்காக நேற்று இரவு இலங்கை வந்தடைந்தார்.
கொழும்பு ஹில்டன் ஹோட்டலின் இன்று பிற்பகல் அறிவு சார்ந்த பொருளாதாரத்தின் சக்தி சவால் என்ற தலைப்பிலான கருத்தரங்கின் ஆரம்ப விழா இடம்பெறவுள்ளது.மின்சக்தி தேவையை பூர்த்தி செய்வதற்காகவும் பொருளாதாரத் துறையின் மேம்பாட்டுக்கான திட்டத்தை மேற்கொள்வதற்கு உள்ளுறவு, வெளியுறவு நிபுணத்துவ குழுவொன்று இந்த கருத்தரங்கினை ஏற்பாடு செய்துள்ளது.
அவர்களின் கருத்துக்களையும், விவாதங்களையும் நடாத்தி அதன் மூலம் கிடைக்க பெறும் பயன்களை கொண்டு நாட்டில் எதிர்கால பொருளாதார சவால்களை எதிர்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

