ரவி வெளிநாடு விஜயம்: பதில் நிதி அமைச்சராக மஹிந்த சமரசிங்க நியமனம்

பதில் நிதி அமைச்சராக மஹிந்த சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளமையினாலேயே இ...

பதில் நிதி அமைச்சராக மஹிந்த சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளமையினாலேயே இந்த நியமனம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று அதிகாலை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க வெளிநாட்டு விஜயத்தை ஆரம்பித்துள்ளார். மஹிந்த சமரசிங்க நிதி இராஜாங்க அமைச்சராக கடமையாற்றி வருகின்றார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மஹிந்த சமரசிங்க பதில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை நிதி அமைச்சர் வெளிநாட்டு விஜயத்தை மேற்கொள்ளும் சகல சந்தர்ப்பங்களிலும் இவரே பதில் நிதி அமைச்சராக கடமையாற்றுவார் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதில் அமைச்சர் ஒருவரை நியமிக்கும் போது இதற்கு முன்னதாக இவ்வாறு எந்தவொரு ஜனாதிபதியும் உறுதியளித்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Related

இலங்கை 6259869329412017937

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item