அரசியல் வடாரங்களில் பேசப்படும் தகவல்கள்..!!
Mahindaஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜயந்த, நாளையதினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அணியில் இண...
https://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_488.html

Mahindaஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜயந்த, நாளையதினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அணியில் இணைந்துக்கொள்ளப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னதாகவே சுசில் பிரேம்ஜயந்த வெளிநாடு ஒன்றுக்கு சென்று விட்டார். அவர் நாளை நாடு திரும்புவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதன்பின்னர் உடனடியாகவே அவர் மஹிந்த ராஜபக்சவுக்கான பிரசாரங்களில் ஈடுபடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு பொதுத்தேர்தலில் போட்டியிட வேட்பாளர் நிலையை வழங்குவதில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமை பின்னடிப்பதே தற்போதைய நிலைமைக்கான காரணமாக அமைந்துள்ளது.
இதேவேளை மஹிந்த ராஜபக்சவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இணக்கத்தை ஏற்படுத்த அமைக்கப்பட்டுள்ள 6 பேர் குழு நாளை மீண்டும் ஒருமுறை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளது.
அதேவேளை எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் 1ஆம் திகதி புதன்கிழமையன்று அறிவிக்கவிருக்கின்றார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தரப்பு, ஜாதிக ஹெல உறுமய கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான பிளவடையாத ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மஹிந்தவிற்கு ஆதரவான முக்கியஸ்தர் ஒருவரினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த அழைப்பினை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்க சுதந்திரக் கட்சியில் வேட்புரிமை வழங்கப்பட மாட்டாதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.கம்பஹா பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலைமையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு சுதந்திரக் கட்சியில் வேட்புரிமை வழங்காமல் இருப்பதில் ஜனாதிபதி உறுதியாக உள்ளார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி உட்பட குழுவினருக்கு வேட்புரிமை வழங்குவதற்கு இதுவரையில் தீர்மானித்துள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

