83ம் ஆண்டிலிருந்து இதுவரை 13000 பேரைக் காணவில்லை! ஆய்வில் தகவல்
1983ம் ஆண்டு முதல் இதுவரையில் 13000 பேரைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் பல பாகங்களிலிருந்தும் காணாமல் போதல் சம்பவங்கள் பததி...
https://kandyskynews.blogspot.com/2015/06/83-13000.html
நாட்டின் பல பாகங்களிலிருந்தும் காணாமல் போதல் சம்பவங்கள் பததிவாகியுள்ளன.
காணாமல் போதல்கள் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் விசேட ஜனாதிபதி ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவின் முதலாவது இடைக்கால அறிக்கையில் இந்த புள்ளி விபரம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு காணாமல் போன 13 ஆயிரம் பேரில் 11 ஆயிரம் பேர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் உயர் நீதிமன்ற நீதவான் மெக்ஸ்வல் பரணகமவின் தலைமையில் இந்த ஆணைக்குழு இயங்கி வருகின்றது.
ஆணைக்குழுவின் முதலாவது இடைக்கால அறிக்கை அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் கடத்தப்பட்டவர்கள் பற்றியும் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

