மஹிந்தவின் தலைமயில் தேர்தலில் போட்டியிடுவோம்!- வாசுதேவ நாணயக்கார

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் தேர்தலில் போட்டியிட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். மஹிந...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் தேர்தலில் போட்டியிட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மஹிந்தவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வேட்பு மனு வழங்கத் தவறினால் அவரது தலைமையில் வேறும் ஓர் அரசியல் கட்சியின் கீழ் தேர்தலில் போட்டியிடுவோம்.
ஏற்கனவே இது குறித்து மக்களை தெளிவுபடுத்தும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சில கட்சிகள் இந்தப் பணிகளை ஆரம்பித்துள்ளன.
வேட்பு மனு தாக்கல் செய்யும் சந்தர்ப்பத்தை கருத்திற் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுத் தேர்தலின் போது மஹிந்த தலைமயிலான கூட்டணி 100 ஆசனங்களை வெற்றிக்கொள்வதனை இலக்க வைத்து செயற்பட உள்ளோம்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இருபது ஆசனங்கள் எஞ்சியிருக்கும் என நம்புவதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு சுதந்திரக் கட்சியில் வேட்பு மனு வழங்கப்பட மாட்டாது என அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன வெளியிட்ட கருத்து தொடர்பில் சிங்கள ஊடகம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related

தலைப்பு செய்தி 781875704054470201

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item