இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மெகி நூடில்ஸை தடுக்குமாறு சுங்கத்துறையினருக்கு கோரிக்கை
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிராகரிக்கப்பட்ட மெகி நூடில்ஸ் தொகைகளை தடுக்குமாறு நுகர்வோர் அதிகாரசபை, இலங்கை சுங்கத் திணைக்கள...
https://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_284.html
இந்த மெகி நூடில்ஸில் அதிகளவான மொனோ சோடியம் குளுக்காமேட் இருப்பதே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகரகமும் இவ்வாறான நூடில்ஸ் இறக்குமதியை தடுக்குமாறு நுகர்வோர் அதிகாரசபையிடம் கோரியுள்ளது.
இந்தநிலையில் நுகர்வோர் அதிகாரசபையின் பணிப்பாளர் ஜே எம் ஏ டக்ளஸ், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிராகரிக்கப்பட்ட நூடில்ஸை பாவனையாளர் நலன் கருதி தடுக்குமாறு சுங்கத்துறையினரை கடிதம் மூலம் கேட்டுள்ளார்.
ஏற்கனவே நேபாளம் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் இந்தியாவில் இருந்து மெகி இறக்குமதியை தடைசெய்துள்ளன.
இந்தியாவில் சுமார் 27ஆயிரம் மெற்றிக்தொன் மெகி நூடில்ஸை அழித்து விடுமாறு இந்திய மத்திய அரசாங்கம் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

