புனர்வாழ்வை பூர்த்தி செய்த முன்னாள் போராளிகள் அறுவர் சமூகத்தோடு சமூகத்தோடு இணைக்கப்பட்டனர்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைந்து செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் ஆறு பேர் இன்று புனர்வ...

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைந்து செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் ஆறு பேர் இன்று புனர்வாழ்வு பெற்று சமூகத்தோடு இணைக்கப்பட்டுள்ளார்கள்.

புனர்வாழ்வு ஆணையாளர் கேணல் எம்.எச்.ஆர்.கமின்டோவின் பணிப்புரைக்கமைய உதவி புனர்வாழ்வு ஆணையாளர் லெப் கேணல் பீ.பீ.எச்.பெர்ணான்டோ, பூந்தோட்ட புனர்வாழ்வு நிலைய பொறுப்பதிகாரி கப்டன் எச்.எஸ்.டீ.பெரேரா உள்ளிட்ட அதிகாரிகளால் இன்று உறவிகளிடதம் கையளிக்கப்பட்டனர்.

வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திலேயே இந்நிகழ்வு இடம்பெற்றது.

இவ்வாறு கையளிக்கப்பட்டோர் புனர்வாழ்வின் போது சிங்கள மொழி, தச்சுத் தொழில், அலுமினிய பிற்றிங் தொழில், வயறிங் தொழில் போன்ற பயிற்சிகளை முடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

தலைப்பு செய்தி 4065002621804399724

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item