மத்திய வங்கி ஆளுனர் வெளிநாட்டுக்கு விஜயம்! காரணம் என்ன?
பணி நிமித்தம் மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மத்திய வங்கியின...
https://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_257.html
மத்திய வங்கியின் உள்ளகத் தகவல்களை ஆதாரம் காட்டி கொழும்பு ஊடகமொன்று இதனைத் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு விஜயத்தை முடித்துக்கொண்டு ஒரு மாதத்திற்கு முன்னதாக மத்திய வங்கியின் ஆளுனர் நாடு திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மத்திய வங்கியின் ஆளுனர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டதாக சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
எனினும், உத்தியோகபூர்வ நோக்கம் ஒன்றிற்காக மத்திய வங்கியின் ஆளுனர் வெளிநாட்டு விஜயத்தை மேற்கொண்டதாக மத்திய வங்கித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் காலப் பகுதியில் பதில் மத்திய வங்கியின் ஆளுனராக பிரதி மத்திய வங்கியின் ஆளுனர் டொக்டர் நந்தலால் வீரசிங்க கடமையாற்ற உள்ளார்.

