வெளிவிவகார அமைச்சர் இன்று ஜப்பான் பிரதமரை சந்திக்கின்றார்

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று ஜப்பான் பிரதமர் சின்சோ அபேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இரு தரப்பு உறவுகள் குறித...

20150619_SriLanka_FM_article_main_image
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று ஜப்பான் பிரதமர் சின்சோ அபேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இரு தரப்பு உறவுகள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 17ம் திகதி ஜப்பானுக்கு விஜயம் செய்த அமைச்சர் சமரவீர எதிர்வரும் 20ம் திகதி வரையில் அங்கு தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் ஆகிய துறைகள் மட்டுமன்றி பிராந்திய மற்றும் பல் தரப்பு அமைப்புக்களில் ஒத்துழைப்புடன் செயற்படுதல் நல்லிணக்க முனைப்புக்களில் பங்களிப்பை பெற்றுக் கொள்ளல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்த விஜயத்தின் போது கவனம் செலுத்தப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

பிரதமர் மட்டுமன்றி ஜப்பானின் உயர் மட்ட அதிகாரிகள் பலரை அமைச்சர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதுடன் மேலும் சந்திப்புக்களை நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் புமியோ கிசிடாவுடன் அமைச்சர் சமரவீர பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related

தலைப்பு செய்தி 7810080809474242877

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item