கைது செய்யப்பட்ட ஃபிபா அதிகாரிகள் நீதிமன்ற காவலிலேயே இருக்க வேண்டும்: நீதிமன்றம் அதிரடி
சூரிச்சில் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட ஃபிபாவை சேர்ந்த 7 அதிகாரிகள் நீதிமன்ற காவலிலே தான் இருக்க வேண்டும் என்று சுவிஸ் நீதிமன்றம் தெரிவித...
https://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_114.html
சூரிச்சில் கடந்த மாதம் ஃபிபாவை சேர்ந்த 7 அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் அவர்களி ஒருவர் சுவிஸ் பெடரல் கிரிமினல் உயர் நீதிமன்றத்தில் தன்னை விடுதலை செய்யுமாறு மேல் முறையீடு செய்துள்ளார்.
ஆனால் நீதிமன்றம், மேல் முறையீடு செய்த அதிகாரியை விடுவித்தால், அந்த நபர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தப்பித்து செல்ல வழியுள்ளதாக கூறி அந்த அதிகாரியின் மனுவை நிராகரித்தது.
மேலும், நீதிமன்றம் அந்த மனுவை தாக்கல் செய்த நபரின் விவரங்கள் எதையும் தெரிவிக்கவில்லை.
ஆனால், அந்த மனுவை தாக்கல் செய்த நபர் உருகுவே நாட்டைச் சேர்ந்த 83 வயதான ஃபிபா துணைத் தலைவர் Eugenio Figueredo என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர், தென் அமெரிக்க கால்பந்தாட்ட சங்கம், உருகுவே கால்பந்தாட்ட சங்கம் ஆகியவற்றின் முன்னாள் தலைவராவார்.
வயது மற்றும் உடல் நிலை காரணம் காட்டி விடுதலைக்கான இந்த மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. எனினும் அதனை ஏற்க முடியாது என நீதிமன்றம் கூறியுள்ளது.

