கூட்டமைப்பின் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்தவுடன் இணைந்து போட்டி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து போட்டியிட உள...


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து போட்டியிட உள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அரசியல் கட்சியொன்றினது தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்தில் பெரும்பாலும் தேர்தலில் போட்டியிடுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் சந்தர்ப்பம் வழங்கப்படாவிட்டால், வேறும் ஓர் கூட்டமைப்பை அமைத்து அதில் மஹிந்த பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவார் என தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுவது குறித்து நாளை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.


Related

தலைப்பு செய்தி 8656862361669702943

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item