சாரணர் இயக்கத்தின் தலைமைப் பதவிக்கு ஜனாதிபதி!
இலங்கை சாரணர் இயக்கத்தின் தலைமைப் பதவிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை சாரணர் இயக்கத்தின் தலைவர் மற்றும் ஆல...
https://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_88.html
இலங்கை சாரணர் இயக்கத்தின் தலைமைப் பதவிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை சாரணர் இயக்கத்தின் தலைவர் மற்றும் ஆலோசகர் பதவி ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில், இலங்கை சாரணர் சங்கம் ää ஜனாதிபதிக்கு இந்த பதவிகளை வழங்கியுள்ளது.
சாரணர் இயக்கத்தின் யாப்பிற்கு அமைய நாட்டுத் தலைவரே அந்த இயக்கத்தின் தலைவராகவும் கடமையாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சாரணர் இயக்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதியுடன், சாரணர் இயக்கப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

