பொதுபல சேனாவின் தலைவர் பதவி விலகினார்
பௌத்த கடும் கோட்பாட்டு அமைப்பான பொதுபல சேனாவின் தலைவர் கிராம விமலஜோதி தேரர் தமது பதவியில் இருந்து விலகியுள்ளார். பொதுபலசேனாவின் பயணம் தமக்...
https://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_10.html
பௌத்த கடும் கோட்பாட்டு அமைப்பான பொதுபல சேனாவின் தலைவர் கிராம விமலஜோதி தேரர் தமது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
பொதுபலசேனாவின் பயணம் தமக்கு பிடிக்கவில்லை என்றக்காரணத்தை கூறியே அவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
இது தொடர்பில் கடிதம் ஒன்றை அவர், அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு அனுப்பியுள்ளார்.
ஏற்கனவே சுகததாஸ உள்ளரங்கில், இடம்பெற்ற அமைப்பின் தேசிய மாநாட்டில், எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி அமைப்பு செயற்படவில்லை.
அதற்கு பதிலாக நிதி சேகரிப்பாளர்களும் ஏனையோருமே அமைப்பை வழிநடத்துவதாக விமலஜோதி தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அரசியலில் ஈடுபடும் எண்ணம் தமக்கு இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இந்த பதவிவிலகல் குறித்து விமலஜோதி தேரர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என்று பொதுபலசேனா அமைப்பு அறிவித்துள்ளது.

