ஜிபோடிக்கு அழைத்துச் செல்லப்பட்ட மேலும் சில இலங்கையர்கள் நாளை நாடு திரும்பவுள்ளனர்

யேமனில் நிர்க்கதிக்குள்ளான நிலையில் மீட்கப்பட்டு, சீனாவின் ஒத்துழைப்புடன் ஜிபோடிக்கு அழைத்துச்செல்லப்பட்ட மேலும் சில இலங்கையர்கள் நாளை (1...

ஜிபோடிக்கு அழைத்துச் செல்லப்பட்ட மேலும் சில இலங்கையர்கள் நாளை நாடு திரும்பவுள்ளனர்
யேமனில் நிர்க்கதிக்குள்ளான நிலையில் மீட்கப்பட்டு, சீனாவின் ஒத்துழைப்புடன் ஜிபோடிக்கு அழைத்துச்செல்லப்பட்ட மேலும் சில இலங்கையர்கள் நாளை (10) நாடு திரும்பவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிடுகின்றது.

29 இலங்கைப் பணியாளர்கள் ஜிபோடியிலிருந்து விமானம் மூலம் நேற்றிரவு நாட்டிற்கு வருகைதந்துள்ளதாக பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கள ரன்தெனிய கூறினார்.

யேமனில் நிர்க்கதிக்குள்ளான இலங்கையர்களை மீட்பதற்கு சீனாவும், பல்வேறு நாடுகளின் தூதரகங்களும் ஒத்துழைப்புக்களை வழங்கியதாக அவர் சுட்டிக்காட்டினார்.

யேமனில் மோதல்கள் மேலும் வலுவடைந்து வருவதால், ஏனைய இலங்கையர்களையும் நாட்டிற்கு அழைத்துவருவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளதாக மங்கள ரன்தெனிய கூறினார்.

சில பணியாளர்கள் நாடு திரும்புவதற்கு விரும்பவில்லை எனவும், நிலைமை மாற்றமடையும் என அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்ததுள்ளது.

Related

இலங்கை 2312370437575327284

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item