அஸ்கிரிய பீடத்தின் மாகாநாயக்கர் உடுகம ஶ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடல் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது

இன்னுயிர் நீத்த அஸ்கிரிய பீடத்தின் மாகாநாயக்க தேரர் உடுகம ஶ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடல் இன்று இரவு இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது. அன்னா...

அஸ்கிரிய பீடத்தின் மாகாநாயக்கர் உடுகம ஶ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடல் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது

இன்னுயிர் நீத்த அஸ்கிரிய பீடத்தின் மாகாநாயக்க தேரர் உடுகம ஶ்ரீ புத்தரக்கித தேரரின் பூதவுடல் இன்று இரவு இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (12) பூரண அரச மரியாதையுடன் கண்டியில் நடைபெறவுள்ளன.

அஸ்கிரிய பீடத்தின் மாகாநாயக்க தேரர் உடுகம ஶ்ரீ புத்தரக்கித தேரர் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை இன்னுயிர் நீத்துள்ளார்.

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் ஊடாக அவரது பூதவுடல் கண்டிக்கு கொண்டு செல்லப்பட்டு எதிர்வரும் 12 ஆம் திகதி வரை அஸ்கிரியை விகாரையில் வைக்கப்படவுள்ளது.

அஸ்கிரிய மாகநாயக்க தேரரின் மறைவையடுத்து அஸ்கிரிய விகாரையின் சங்க சபை இன்று கூடி அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் ஆராய்ந்துள்ளது.

இதன்போது, சம்பிரதாயத்தின்படி ஶ்ரீ தலதா மாளிகையின் தங்கத்திலான சாவி அனுநாயக்க தேரருக்கு வழங்கப்பட்டது.

1930 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் திகதி குருணாகல் தம்பதெனிய – உடுகம கிராமத்தில் பிறந்த தேரரின் இயற்பெயர் அமரசிங்க.

1945 ஆம் ஆண்டு உடுகம ஶ்ரீ புத்த ரக்கித தேரர் எனும் பெயரில் துறவரம் பூண்ட இவர் 1966 ஆம் ஆண்டு அஸ்கிரி பீடத்தின் சங்க சபைக்கு நியமிக்கப்பட்டு 1988 ஆம் ஆண்டு அனுநாயக்க தேரராகத் தெரிவானார்.

அதனையடுத்து, 1999 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் திகதி உடுகம ஶ்ரீ புத்தரக்கித தேரர் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரராக நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னர் பௌத்த மதத்தின் மேம்பாட்டிற்காகவும், சமூக முன்னேற்றத்திற்காகவும் அளப்பரிய பல சேவைகளை ஆற்றி மக்கள் மனதில் இடம்பிடித்தார்

Related

இலங்கை 3227083694381540732

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item