தந்தையின் உயிரை காப்பாற்ற நிதி திரட்டிய இணையத்தின் சுட்டி குழந்தை
இணையதளத்தில் மிகவும் பிரபலமடைந்த அமெரிக்க குழந்தை தனது தந்தையின் அறுவை சிகிச்சைக்காக நிதி திரட்டியுள்ளான். கடந்த 2007ம் ஆண்டு ‘தி சக்சஸ்...
https://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_935.html
கடந்த 2007ம் ஆண்டு ‘தி சக்சஸ் கிட்’(The success kid) என்ற சாம் கிரைனரின்(Sam Griner) 11 மாத குழந்தை பருவ புகைப்படம் இணையத்தை கலக்கியது.
தற்போது சாமின் தந்தை ஜஸ்டினுக்கு(Justin) சிறுநீரகம் செயலிழந்திருப்பதால், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இதற்கு அதிகளவில் பணம் செலவாகும் என்பதால், என்ன செய்வது என யோசித்த ஜஸ்டினின் மனைவி இணையதள வாசிகளின் உதவியை நாடியுள்ளார்.
இதனையடுத்து கடந்த 8ம் திகதி GoFundMe என்ற நிதி திரட்டும் தளத்தில், தனது கணவனின் சிகிச்சைக்காக நிதி உதவி கேட்ட அவர், அதற்கான பக்கத்தையும் உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில் சுமார் 75,000 டொலர்களை (46 லட்சத்து 78 அயிரம் ரூபாய்) ஜஸ்டினின் மனைவி எதிர்பார்த்ததாக கூறப்படுகிறது.
ஆனால் குழந்தை சாம் மற்றும் அவரது தந்தையின் மீதும் அதிக அன்பு வைத்துள்ள இணையதள வாசிகள், 75,000 டொலர்களுக்கு மேலும் அள்ளிக் கொடுத்துள்ளனர்

