60 ஆண்டு காலத்தில் ராணிக்கு எதிராய் நடக்கும் முதல் போராட்டம்: காரணம் என்ன?

பிரித்தானிய அரண்மனை ஊழியர்கள் கூடுதல் ஊதியம் கோரி வேலை நிறுத்த போரட்டத்தில் ஈடுபடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள...

பிரித்தானிய அரண்மனை ஊழியர்கள் கூடுதல் ஊதியம் கோரி வேலை நிறுத்த போரட்டத்தில் ஈடுபடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள வின்ட்சார் அரண்மனை(Windsor Castle) மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

உலகின் பழமை வாய்ந்த அரண்மனைகளில் ஒன்றாக கருதப்படும் இந்த அரண்மனையை சுற்றி பார்க்க ஆயிரக்கணக்கானோர் ஆண்டு தோறும் வருகின்றனர்.

இங்கு சுமார் 120க்கும் அதிகமான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஊதிய உயர்வு வேண்டும் என்பதற்கும், தங்களது பணிச்சுமையை குறைக்க கோரியும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.

இந்த மாத இறுதியில் இப்போராட்டம் நடக்கும் என்றும் இதற்கு அரண்மனை ஊழியர்களில் சுமார் 84 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ராணி பதவி விகித்து 60 ஆண்டுகாலத்தில், இது அவருக்கு எதிராக நடக்கவிருக்கும் முதல் போராட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

உலகம் 3177421332286349971

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item