இங்கிலாந்தின் தென்பகுதியில் ஆறு அங்குல ஸ்பானிஷ் நத்தைகள் படையெடுப்பு! - தோட்டக்காரர்கள் அச்சம்!

இங்கிலாந்தின் தென்பகுதியில் ஆறு அங்குல அளவுள்ள நூற்றுக்கணக்கான பெரிய ஸ்பானிஷ் நத்தைகள் முதல் முறையாக காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...


இங்கிலாந்தின் தென்பகுதியில் ஆறு அங்குல அளவுள்ள நூற்றுக்கணக்கான பெரிய ஸ்பானிஷ் நத்தைகள் முதல் முறையாக காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நத்தைகளின் குறியீட்டுப் பெயர் killer slugs ஆகும். இவை ஐரோப்பிய நாட்டில் இருந்தே வந்திருக்கும் என கருதப்படுகின்றது. நத்தைகளின் படையெடுப்பு காரணமாக தோட்டக்காரர்கள் மற்றும் விவசாயிகள் தங்களது பயிர்களை இவை துடைத்தழித்து விடுமென அஞ்சுகின்றனர். ஐரோப்பாவில் 100 க்கும் அதிகமான நத்தை வகைகள் காணப்படுகின்றன. இந்த நுண்ணுயிரிகள் இறந்த எலிகள் இறைச்சி மற்றும் நத்தைகளையும் உண்கின்றன. குறித்த நத்தைகள் முதன்முதலில் 2010 ஆம் ஆண்டு பிரிட்டனில் காணப்பட்டது. எனினும் அப்போதிருந்த கடுமையான குளிர் அவற்றை அழிக்க உதவியது.

ஆனால் இப்போது அவை தெற்கு இங்கிலாந்து முழுவதும் பரவி கென்ட் Tonbridge பகுதியில் காணப்படுகின்றன. இந்த ஸ்பானிஷ் நத்தைகள் Arion vulgaris என அழைக்கப்படுகின்றன. அவை உயிர்வாழ்வதற்கு ஈரப்பதனும் லேசான குளிரும் உதவுகின்றன. படையெடுத்திருக்கும் இந்த நத்தைகளை சாதாரண பூச்சிக்கொல்லி மருந்து முறைகளின் கட்டுப்படுத்த முடியாது. ஏனெனில் அவை பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு ஈடுகொடுக்கும் எதிர்ப்புச் சக்தியை கொண்டுள்ளன. இவற்றை சில பறவைகள் அல்லது முள்ளம்பன்றிகள் உண்ணுகின்றன. இவ்வகை ஸ்பானிஷ் நத்தைகளின் பரம்பல் மேற்கு பிரான்சில் உருவானதாக கூறப்படுகின்றது.

Related

உலகம் 7895206135167920112

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item