சஷீந்திர ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிப்பு

ஊவா மாகாண முதலமைச்சர் ஹரீண் பெர்ணாண்டோவிற்கு எதிராக, ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த மனுவை மேன்மு...


ஊவா மாகாண முதலமைச்சர் ஹரீண் பெர்ணாண்டோவிற்கு எதிராக, ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ஊவா மாகாண முதலமைச்சராக ஹரீண் நியமிக்கப்பட்டமை சட்டவிரோதமானதென தெரிவித்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சஷீந்திர மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றபோது, மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த மனுவை நிராகரித்தது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் ஊவா மாகாண முதலமைச்சராக சஷீந்திர ராஜபக்ஷ கடமையாற்றினார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில், இலங்கையில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டால் ஹரீணுக்கு முதலமைச்சர் பதவியை வழங்குவதாக தற்போதைய ஜனாதிபதி மைத்திரியால் வாக்குறுதி வழங்கப்பட்டது.
அதற்கமைய கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்று ஆட்சியமைத்ததைத் தொடர்ந்து, ஊவா மாகாண முதலமைச்சராக ஹரீண் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related

இலங்கை 1731510769807544536

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item