மொரோக்கோ தாயின் அதிசிய திரு குர்ஆன் ஓதல் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ காட்சி!
வீடியோவில் நீங்கள் காணும் மூதாட்டி மொரோக்கோ நாட்டை சார்ந்தவர். வயோதிகத்தின் காரணமாக பல்வேறு நோய்களால் பாதிக்க பட்டு படுக்கையில் உள்ளார் ...
https://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_901.html

வீடியோவில் நீங்கள் காணும் மூதாட்டி மொரோக்கோ நாட்டை சார்ந்தவர்.வயோதிகத்தின் காரணமாக பல்வேறு நோய்களால் பாதிக்க பட்டு படுக்கையில் உள்ளார்
வயோதிகத்தின் காரணமாக இவர் தனது நினைவாற்றலையும் இழந்து விட்டார்.
கடந்துகால நிகழ்வுகள் எதுவம் அவரின் நினைவில் இல்லை.
நிகழ்கால நினைவுகளை கூட அவரால் நினைவில் வைத்து கொள்ள முடியவில்லை.
சற்று முன் உட்கொண்ட உணவு என்னவென்று கேட்டால் அவரால் அதை குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை தனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் கூட அந்த தாயிக்கு நினைவில்லை.
அந்த அளவிற்கு அவர் நினைவாற்றலை இழந்து உள்ளார்.
நமது அன்னைக்கு இணையான அந்த தாய் உலகியல் விசயங்கள் அனைத்தையும் மறந்து விட்டாலும் அவரது மனதில் நின்ற திருகுர்ஆன் வசனங்கள் எதையும் அவர் மறக்கவில்லை
அவரது மனதில் அனைத்து நினைவுகளும் வெளியேறிவிட்ட நிலையிலும் திருகுர்ஆன் நினைவு அவரது மனதில் இருந்து வெளியேறவில்லை.
எல்லாவற்றையும் மறந்து விட்டு படுத்த படுக்கையில் இருக்கும் அந்த தாய் அழகிய குரலில் அழகான உச்சரிப்புடன் திருமறை வசனங்களை ஓதுவதை செவியுறும் போது உண்மையாகவே அது நம்மை மெய்மறக்க செய்கிறது நமது இறை உணர்வுகளை கிளறிவிடுகிறது.

