கோட்டபாயா ராஜபக்ஷவின் இரண்டு சுறா மீன்கள் ரகசியம் கசிவு

மவுன்லவேனியா (கல்கிசை) பகுதியில் கோட்டபாயா ராஜபக்ஷவின் பினாமி பெயரில் இருக்கும் பண்ணை வீடு ஒன்றில் உள்ள ரகசியம் இது. குறித்த ...





Untitled




மவுன்லவேனியா (கல்கிசை) பகுதியில் கோட்டபாயா ராஜபக்ஷவின் பினாமி பெயரில் இருக்கும் பண்ணை வீடு ஒன்றில் உள்ள ரகசியம் இது. குறித்த இந்த பண்ணை வீட்டுக்கு பின் புறத்தில் உள்ள கட்டடம் ஒன்றினுள் பாரிய மீன் தொட்டி ஒன்று உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இறந்த நிலையில் 2 சுறா மீன்களும் காணப்படுவதாக செய்திகள் கசிந்துள்ளது. சுறா மீன் என்றவுடன் ஏதோ கறி சமைக்கும் மீன் என்று நினைக்கவேண்டாம். சுமார் 6 அடி நீளமுள்ள ராட்சச சுறா மீன்கள் 2 அங்கே வளர்கப்பட்டு வந்துள்ளது.

இந்த பாரிய மீன் தொட்டிக்கு மேல் கப்பி (கிணற்றில் கயிற்றைக் கொண்டு வாளியை இறக்க பாவிக்கப்படுவது) போன்ற அமைப்பு காணப்படுகிறது. வெள்ளை வேனில் கடத்தப்படும் நபர்களை இங்கே கொண்டு சென்று ,தலை கீழாக கட்டி தொங்க விட்டு , சித்திரவதை செய்துள்ளார்களா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது என்கிறார்கள்.

தண்ணீரில் ஒரு தடவை தலையை முங்கினால் போதும் , அங்கே கொலை வெறியோடு அலைந்து திரியும் அந்த 2 சுறா மீனும் தலையைக் கடிக்க நீந்திவரும். இதனை பார்க்கும் மற்றைய நபர் எல்லா உண்மைகளையும் பயத்தில் நடுங்கியே சொல்லிவிடுவார். இவ்வாறு கோட்டபாய ஆட்கள் தமக்கு எதிராக உள்ள நபர்களை கொடுமைப்படுத்தினார்களா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

இருப்பினும் குறித்த வீடு கோட்டபாயவின் பெயரில் இல்லை. மேலும் அவருக்கு நெருங்கிய சகா ஒருவரின் பெயரிலேயே இருக்கிறது. அங்கே நிலத்தில் காணப்படும் ரத்த மாதிரிகளை எடுத்து புலனாய்வுப் பிரிவினர் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இருப்பினும் இதனை தற்போது ஆட்சியில் உள்ள ஐக்கிய தேசிய கட்சி இதுவரை வெளியிடவில்லை என்று குற்றம் கூறப்படுகிறது.

சரியான ஆதாரம் எதுவும் இல்லாமல், வெறும் சுறா மீன்களை வைத்து எதனையும் நாம் கூற முடியாது என்று பொலிசார் கூறியுள்ளார்கள்.ஆனால் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கோட்டபாய 2 யானைக் குட்டிகளை வளர்த்து வந்த விடையம் இதுவரை யாருக்கும் தெரியாது. அவராக பொலிசாரிடம் இதனை ஒப்படைத்த பின்னரே மீடியாக்களுக்கு செய்தி கசிந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.














Related

இலங்கை 2467429837609650054

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item