தேசிய அரசாங்கம் பிறகு முதலில் பொதுத் தேர்தல் நடாத்தப் படவேண்டும்
திட்டமிட்டபடி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்படவேண்டும் தேர்தல் ஒன்றை நடாத்தாம...
https://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_187.html
திட்டமிட்டபடி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்படவேண்டும் தேர்தல் ஒன்றை நடாத்தாமல், பாராளு மன்றின்காலத்தினை நீட்டிக்க எடுக்கும் முயற்சிகளை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது. பொதுத் தேர்தலின் பின்னர் அந்தந்த கட்சிகளுக்கு தேவையான வகையில் தேசிய அரசாங்கமொன்றை அமைத்துக்கொள்ள முடியும்.
தேசிய அரசாங்கமொன்றில் ஜே.வி.பி அங்கம் வகிக்காது என சிங்கள பத்திரிகையொன்றுக்கு அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கமொன்றை அமைக்க சுதந்திரக் கட்சி இணக்கம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பித்தக்கது
ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசாகங்ம் அமைக்குமாயின் பாராளுமன்றத் தேர்தல் இவ்வருடம் நடைபெறாது என்றும் 2016 ஆம் ஆண்டே தேர்தல் நடைபெறலாம் எனவும் தெரிவிக்கப்படும் நிலையில் அனுரகுமாரமேற்படி தெரிவித்துள்ளார்
அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 45 ஆக அமையவேண்டும் என்றும் அதில் 17 அமைச்சுக்கள் சுதந்திரக் கட்சிக்கு வழங்கப்படவேண்டும் என்றும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பில்இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது


