பிரஞ்சு பல்கலைக்கழகங்களில் முஸ்லீம் மதகுரு பயிற்சி
பிரான்சில் கடந்த மாதம் இஸ்லாமியத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களை அடுத்து நாட்டின் முஸ்லீம் சமுதாயத்துடன் புரிந்துணர்வை மேம்படுத்தும் ம...
https://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_106.html
பிரான்சில் கடந்த மாதம் இஸ்லாமியத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களை அடுத்து நாட்டின் முஸ்லீம் சமுதாயத்துடன் புரிந்துணர்வை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, பிரெஞ்சு பல்கலைக் கழகங்களில் இஸ்லாமிய மதகுருக்களுக்கு பயிற்சி தர பிரெஞ்சு அரசு திட்டங்களை அறிவித்திருக்கிறது.

பிரஞ்சு பல்கலைக்கழகங்களில் முஸ்லீம் மதகுரு பயிற்சி
அரசு தரவுள்ள இந்த பல்கலைக்கழகப் பயிற்சி, பிரெஞ்சு குடியரசின் விழுமியங்களுக்கு விசுவாசமான ஒரு இஸ்லாத்தை உருவாக்கும், இது சிறைகளிலும் பாதுகாப்புப் படைகளிலும் வேலை செய்யும் முஸ்லீம் மதகுருமார்களுக்கு கட்டாயமாக்கப்படும் என்று அரசு கூறியது.
கடந்த மாதம் சார்லி எப்தொ இதழின் அலுவலகத்திலும், ஒரு யூத சூப்பர்மார்க்கெட்டிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

