சீனாவிலிருந்து 14 ஆயிரம் ஹஜ் பயணிகள் சவூதி பயணம் : எதிர்ப்பில் வளர்ந்த இஸ்லாம்....!!
அல்லாஹ்வுடைய சாசாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் என்றென்றும் நிலவட்டும். சீனாவில் இஸ்லாத்தையும், முஸ்ல...
https://kandyskynews.blogspot.com/2015/02/14_9.html
அல்லாஹ்வுடைய சாசாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் என்றென்றும் நிலவட்டும்.
சீனாவில் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் ஒழித்து கட்டுவதற்காக சீன அரசு முஸ்லிம்களுக்கு எதிரான கடும் போக்கை கையாள்வதை தொடர்ந்து பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் சீனாவில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் மாநிலமான சிங்ஜியாங் மாநிலத்தில் அரசு ஊழியர்களும், மாணவர்களும் நோன்பு நோற்பதற்கு கூட அரசு தடை விதித்திருந்தது.
அந்த அளவுக்கு கெடுபிடிகளை சீன அரசு கையில் எடுத்திருந்தாலும் அதே சீனாவில் இஸ்லாத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருப்பதை காண முடிகிறது.
முஸ்லிம்களின் முக்கிய கடமைகளுள் ஒன்றான புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற இந்த ஆண்டு சீனாவிலிருந்து சவூதி அரேபியாவுக்கு 14 ஆயிரம் ஹஜ் பயணிகள் வருகை தருகிறார்கள்.
எந்த மாநிலத்தில் முஸ்லிம்கள் நோன்பு நோற்க கூடாது என்று தடை விதித்தார்களோ அதே மாநிலத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியுள்ளதாக சீனாவுக்கான தூதர் முஸ்தபா யங் டிஜிபோ தெரிவித்துள்ளார்


