எகிப்தில் கால்பந்தாட்ட போட்டியின் போது கலவரம்: 14 பேர் பலி

எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் கால்பந்தாட்ட போட்டியின் போது ஏற்பட்ட கலவரத்தால் 14 பேர் பலியானார்கள். மேலும் பலர் படுகாயமடைந்தனர். ...




egyptஎகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் கால்பந்தாட்ட போட்டியின் போது ஏற்பட்ட கலவரத்தால் 14 பேர் பலியானார்கள். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.


கெய்ரோவில் உள்ள ஏர் டிபன்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த கால்பந்து போட்டியில் ‘எகிப்து பிரீமியர் லீக் கிளப் ஜமாலிக்’ அணியுடன் ‘ஈ.என்.பி.பி.ஐ.’ அணி மோதியது. போட்டி நடந்து கொண்டிருந்த போது ‘ஜமாலிக்’ அணியின் ஆதரவாளர்கள் டிக்கெட் இல்லாமல் ஸ்டேடியத்திற்குள் நுழைய முயற்சித்தனர். இதனால் பாதுகாப்பு படையினருக்கும் ஜமாலிக் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் போது பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை உபயோகித்தனர்.

இந்த கலவரத்தில் 14 பேர் பலியானதாகவும், பலர் படுகாயமடைந்ததாகவும் சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஹோஸாம் அப்தெல் கபார் தெரிவித்தார். படுகாயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கலவரத்தை அடுத்து கால்பந்து போட்டித்தொடர் காலவரையின்றி ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வன்முறையில் ஈடுபட்ட ஜமாலிக் அணி ஆதரவாளர்கள் 17 பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் எகிப்தின் போர்ட் ஸ்டேடியத்தில் இது போன்று நடந்த கலவரத்தில் 70 பேர் பலியானது நினைவு கூரத்தக்கது.

Related

உலகம் 6062425776262702315

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item