13ம் திருத்தச் சட்டம் மேற்குலக நாடுகளை மட்டுமே திருப்திப்படுத்தும்!
13ம் திருத்தச் சட்டம் மேற்குல நாடுகளை மட்டுமே திருப்திபடுத்தும் என தேசப்பற்றுடைய பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது. அத்துடன் 13 ஆம் தி...
https://kandyskynews.blogspot.com/2015/02/13.html
13ம் திருத்தச் சட்டம் மேற்குல நாடுகளை மட்டுமே திருப்திபடுத்தும் என தேசப்பற்றுடைய பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது.
அத்துடன் 13 ஆம் திருத்தச்சட்டத்தில் பல குறைப்பாடுகள் இருப்பதாகவும், இந்த குறைப்பாடுகள் தொடர்பில் ஏற்கனவே பொதுமக்களுக்கும் அரசாங்கத்திற்கும் தெளிவுபடுத்தியுள்ளதாக தேசப்பற்றுடைய பிக்குகள் முன்னணியின் பொதுச் செயலாளர் பெங்கமுவே நாலக்கத் தேரர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் 13 ஆம் திருத்தச்சட்டத்தில் பல குறைப்பாடுகள் இருப்பதாகவும், இந்த குறைப்பாடுகள் தொடர்பில் ஏற்கனவே பொதுமக்களுக்கும் அரசாங்கத்திற்கும் தெளிவுபடுத்தியுள்ளதாக தேசப்பற்றுடைய பிக்குகள் முன்னணியின் பொதுச் செயலாளர் பெங்கமுவே நாலக்கத் தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் ஆதரவுடன் 13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாகவும், 13ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட மாகாணசபை முறைமையினால் எவ்வித நன்மைகளும் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே வடக்கு கிழக்குமாகாணத்தின் முதலமைச்சராக இருந்த வரதராஜ பெருமாள் ஈழப் பிரகடனம் செய்திருந்ததாகவும், இந்த மாகாணசபை முறைமை நாட்டை பிளவுபடுத்தவே வழியமைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மாகாண சபைகளை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு காணப்பட்டாலும் இந்த மாகாணசபை முறைமை ஆபத்தானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.மாகாணசபை உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கும் நாட்டுக்கும் விசுவாசமாக செயற்படவில்லை எனவும், மேற்குலக நாடுகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மாகாணசபைகளை அதன் உறுப்பினர்கள் பாராளுமன்றிற்கு செல்லும் பயிற்சி பட்டறையாகவே பயன்படுத்திக்கொள்வதாகவும், பொதுமக்களின் பணமே விரயமாக்கப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்


