காத்தான்குடியில் டெங்கு காய்ச்சலினால் 07 வயது முஸ்லிம் சிறுமி வபாத்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரசபைப் பிரிவில் டெங்கு காய்ச்சல் காரணமாக 7 வயதுச் சிறுமி ஒருவர் சனிக்கிழமை (06) உயிரிழந்ததாக காத்த...

1525815_634821820955781250மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரசபைப் பிரிவில் டெங்கு காய்ச்சல் காரணமாக 7 வயதுச் சிறுமி ஒருவர் சனிக்கிழமை (06) உயிரிழந்ததாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார். ஏ.ஸாயிதா ஸித்னா என்ற 7 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்தார். இவர் காத்தான்குடி மீரா பாலிகா மகளிர் மகா வித்தியாலயத்தில் இரண்டாம் தரத்தில் கல்வி கற்றுவருகின்றார்.

சில தினங்கள் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்த இச் சிறுமி சனிக்கிழமை (06) மிகவும் சோர்வடைந்து காணப்பட்ட நிலையில், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையிலேயே இந்தச் சிறுமி உயிரிழந்தார். இந்தச் சிறுமியின் மரணம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார். தற்பொழுது டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவிவருகிறது. பொதுமக்கள் தங்களது சுற்றுச்சூழலை சுத்தமாகவும்,பாதுகாப்பாகவும் வைத்திருக்குமாறு வேண்டப்படுகின்றன.

Related

இலங்கை 8098938173079359904

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item