சஜின் வாஸ் தொடர்பில் சந்திரிக்காவின் வாக்குறுதியை தொடர்ந்து தீ வைக்க தயாரானவர் கீழிறங்கினார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு உறுப்பினருமான சஜித் வாஸ் கு...
https://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_922.html
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு உறுப்பினருமான சஜித் வாஸ் குணவர்தனவிற்கு எதிராக பலபிட்டியவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய அரசாங்கத்தோடு அவரை இணைத்துக் கொள்ள வேண்டாம் என்று கோரியே பலபிட்டிய பிரதேச மக்கள் பலபிட்டிய பஸ் தரிப்பிடத்திற்கு முன்னால் இன்று (13) எதிர்ப்பு ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பலபிட்டிய ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான உறுப்பினர் கமல் ஜயந்த டி சொய்சா, ருகுணு மக்கள் கட்சி தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜந்த சொய்சா மற்றும் பல வழக்கறிஞர்களும் இவ் எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்கெட்டவர்களை அரசாங்கத்துடன் இணைக்க வேண்டாம், சஜித் வாஸ் குணவர்தன அரசாங்கத்தில் தற்போதே பாதுகாப்பை பெற்றுவருதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
சஜித் வாஸ் குணவர்தனவை அரசாங்கத்துடன் இணைத்தால் தாங்கள் தீ வைத்து கொள்வதாக ஒருவர் பலபிட்டிய பஸ் தரிப்பிடத்தின் கூரைமேல் ஏறி பெற்றோலுடன் அமர்ந்திருந்து மிரட்டல் விடுத்தார்.
இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் தொலைபேசி அழைப்பு மூலம் கிடைத்த வாக்குறுதியை அடுத்து குறித்த நபர் கீழே இறங்கியுள்ளார்.

