நாட்டில் முஸ்லிம்கள் கூடிய ஆர்வத்துடன் வாக்களிப்பு

ஏழாவது தடவையாக இடம்பெறும்   ஜனாதிபதித் தேர்தலில் நாட்டில் பரவலாக மக்கள் கூடிய ஆவர்வம் காட்டிவருவதாக தெரிவிக்கப்படுகிறது குறிப்பாக முஸ்லிம் ம...

ஏழாவது தடவையாக இடம்பெறும்   ஜனாதிபதித் தேர்தலில் நாட்டில் பரவலாக மக்கள் கூடிய ஆவர்வம் காட்டிவருவதாக தெரிவிக்கப்படுகிறது குறிப்பாக முஸ்லிம் மக்கள்  வாக்களிப்பில் அதிக ஈடுபாடு காட்டிவருவதாக சிங்கள ஊடகம் ஒன்றும் குறிப்பிடுகிறது .

வடமேல் மாகாணம் குருநாகல் , புத்தளம் ஆகிய பிரதேசங்களும் முஸ்லிம் வாக்காளர்கள் காலை யுடன் வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளனர் அதபோல் மத்திய , தென் மாகாண முஸ்லிம்களும் கூடிய ஆர்வத்துடன் வாக்களிப்பில் அதிகப் படியாக கலந்துகொண்டதாக அறிய முடிகிறது .

காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்குப் பதிவு நடவடிக்கைகள் சுமுகமாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைதீவு போன்ற மாவட்டங்களின் தமிழ் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிய வருகிறது .

அதேவேளை கிழக்கு மாகாணத்திலும் ஆர்வத்துடன் அமைதியான வாக்களிப்பு இடம்பெற்றுவருகிறது என தெரியவருகிறது. கல்முனை பிரதேசத்தில் கல்முனைக்குடி, கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு மற்றும் அக்கரைப்பற்று, காத்தான்குடி போன்ற பிரதேசங்களிலும் அதிகமான வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர் .

வடக்குகிழக்கு மற்றும் மலையக பகுதிகளை பொறுத்தவரை மக்கள் அதிகப்பட்ச வாக்குகளை செலுத்தி வருவதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர் சிங்கள மக்கள் அதிகளவில் வாழும் மாவட்டங்களிலும் வாக்காளர்கள் வாக்களிப்பில் அக்கறை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

குறிப்பாக இரண்டு பிரதான வேட்பாளர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பொலநறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை பகுதிகளில் வாக்களிப்பு ஆரம்பமாகும் முன்னரே வாக்காளர்கள் வரிசையில் நின்றதை பார்க்கக்கூடியதாக இருந்ததாக அறிவிக்கப் பட்டுள்ளது

Related

இலங்கை 7904984833240175693

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item