தனக்கு ஏதாவது ஆபத்துக்கள் நேர்ந்தால் அரசாங்கமே அதற்குப் பொறுப்பு- ரிஷாத்.
தனக்கு ஏதாவது ஆபத்துக்கள் ஏற்படின் அதற்கு அரசாங்கம் வகைசொல்ல வேண்டும் என முன்னாள் கைத்தொழில் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும...
https://kandyskynews.blogspot.com/2014/12/blog-post_53.html
இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
நான் அரசாங்கத்திலிருந்து வெளியேறத் தீர்மானித்த தினத்தன்று, எனக்கு அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவரிடமிருந்து ஓர் அனாமதேய தொலைபேசி அழைப்பு வந்தது. நான் அரசாங்கத்திலிருந்து விலகினால் பல பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டி வரும் என அந்த தொலைபேசி அழைப்பின் போது எனக்கு எச்சரிக்கை விடுத்தனர். வந்த தொலைபேசியின் இலக்கம் மற்றுமுண்டான தகவல்கள் என்னிடம் உள்ளன எனவும் முன்னாள் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

