ஐ.எஸ். இயக்கத்தில் இணைய முயன்ற 10 வாலிபர்கள் அதிரடி கைது
கனடாவில் ஐ.எஸ். இயக்கத்தில் இணைய முயன்ற 10 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்....
https://kandyskynews.blogspot.com/2015/05/10_22.html
ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். இயக்கத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் இணைந்து வருகின்றனர்.
இவர்களை தடுக்கும் நடவடிக்கையில் பல்வேறு நாடுகளும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்தநிலையில் ஐ.எஸ். இயக்கத்தில் இணைவதற்காக கனடாவில் உள்ள Montreal's Pierre Elliott Trudeau சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஈராக் மற்றும் சிரியாவிற்கு செல்ல முயன்ற 10 வாலிபர்களை கனடா பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
பின்னர் ராயல் கனடா மவுண்டேட் பொலிசார் (The Royal Canadian Mounted Police) நேற்று முன்தினம் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில், கைது செய்யப்பட்ட வாலிபர்களிடம் இருந்த கடவுச்சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளனர்.

