விருப்பு இலக்கம் வழங்கல் இன்றுடன் நிறைவு
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கம் வழங்கும் நடவடிக்கையை இன்றுடன் நிறைவு செய்ய எதிர்பார்த்துள...
http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_384.html

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கம் வழங்கும் நடவடிக்கையை இன்றுடன் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
விருப்பு இலக்கம் வழங்கும் நடவடிக்கை நேற்றைய தினம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகங்களில் ஆரம்பிக்கப்பட்டதாக பிரதி தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார்.
10 மாவட்டங்களில் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கம் வழங்கி முடிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்களில் இருந்து விருப்பு இலக்கம் வழங்கப்படவுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் தேர்தல் காலத்தில் பொலிஸார் நடந்துகொள்ள வேண்டிய விதம் குறித்து தெளிவுபடுத்த இலங்கை மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன் முதல்கட்ட நடவடிக்கை நாளை சப்ரகமுவ மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate