குற்றவாளிகளுக்கு வேட்பு மனு வழங்கப்பட்டது ஏன்? விளக்கம் கோரும் அதாவுத செனவிரட்ன

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் ஊழல் மோசடிகள், திருடர்கள் உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு ஏன் வேட்பு மனு வழங்கப்பட்டது என்பதனை நாட்டு மக்க...

athavuda_senaviratna_002
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் ஊழல் மோசடிகள், திருடர்கள் உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு ஏன் வேட்பு மனு வழங்கப்பட்டது என்பதனை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டுமென கேகாலை மாவட்டத் தலைவர் அதாவுத செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
நான் தலைமை தாங்கும் கேகாலை மாவட்டத்தில் ஊழல் மோசடிகள் மற்றும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இரண்டு பேருக்கு ஐக்கிய மக்கள் மக்கள் சுதந்தரக் கூட்டமைப்பில் வேட்பு மனு வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பு மனு தயாரிப்பில் தாம் தலையீடு செய்யவில்லை என ஜனாதிபதி கூறியுள்ளார். அவ்வாறு எனில் திருடர்கள் மோசடிகாரர்களுக்கு யார் வேட்பு மனு வழங்கியது. யார் அவ்வாறு அதிகாரம் வழங்கியது.
திருடர்கள், மோசடிகாரர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதனால், கொள்கை அடிப்படையிலான அரசியலில் ஈடுபட்டு வரும் எனக்கு மக்கள் முன்னால் சென்று வாக்கு கோர முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என அதாவுத செனவிரட்ன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

Related

இலங்கை 3692980005864989148

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item