ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கிராமங்களை அபிவிருத்தி செய்யவில்லை: மல்வத்த மகாநாயக்கர்
கடந்த 20 வருடங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையிலான அரசாங்கம், கிராம அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்கவில்லை என்று மல்வத்த மகாநாயக...
http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_482.html?m=0

கடந்த 20 வருடங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையிலான அரசாங்கம், கிராம அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்கவில்லை என்று மல்வத்த மகாநாயக்கர் தெரிவித்துள்ளார்
மல்வத்த மகாநாயக்கர் திப்பட்டுவாவே சித்தார்த்த ஸ்ரீ சுமங்கல தேரரிடம் நேற்று மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆசிப்பெறச் சென்ற போதே இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டையில் மக்களுக்கான அடிப்படை வசதிகள் செய்துக்கொடுக்கப்படாமல், விமான நிலையமும் துறைமுகமும் அமைக்கப்பட்டது.
இதன்காரணமாகவே மக்கள் முன்னைய அரசாங்கத்துக்கு வாக்களிக்கவில்லை என்றும் மல்வத்த மகாநாயக்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பொறுத்த வரையில் அந்தக்கட்சி ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படும் போது தமது கை சின்னத்தை மறந்துப் போயுள்ளது.
இது மாற்றியமைக்கப்பட வேண்டும். கை சின்னமே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அடையாளப்படுத்தும் சின்னமாக அமையும் என்றும் மகாநாயக்கர் குறிப்பிட்டார்.
இதன்போது கருத்துரைத்த பிரசன்ன ரணதுங்க, சந்திரிகா குமாரதுங்க ஆட்சியில் இருந்தபோதே அபிவிருத்திகள் இடம்பெறவில்லை. எனினும் மஹிந்த ஆட்சியின் போது கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டன என்று குறிப்பிட்டுள்ளார்


Sri Lanka Rupee Exchange Rate