ஜேர்மனி விமான விபத்தில் இறந்தவர்களுக்கு 2 லட்சம் யூரோ இழப்பீடு வழங்க வேண்டும்: போர் கொடி தூக்கும் உறவினர்கள்

ஜேர்மனி விமான விபத்தில் உயிரிழந்த பயணிகளுக்கு இழப்பீடாக 25 ஆயிரம் யூரோ வழங்கப்படுவதை எதிர்த்து அதனை 2 லட்சம் யூரோக்களாக உயர்த்த வேண்டும் என...

lufthansa_002
ஜேர்மனி விமான விபத்தில் உயிரிழந்த பயணிகளுக்கு இழப்பீடாக 25 ஆயிரம் யூரோ வழங்கப்படுவதை எதிர்த்து அதனை 2 லட்சம் யூரோக்களாக உயர்த்த வேண்டும் என உயிரிழந்த பயணிகளின் உறவினர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஜேர்மனியின் லூஃப்தான்சா நிறுவனத்தை சேர்ந்த ஜேர்மன் விங்க்ஸ் என்ற விமானம் கடந்த மார்ச் 24ம் திகதி பிரான்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 150 பேரும் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு உடனடி நிவாரணமாக 50 ஆயிரம் யூரோக்களை லூஃப்தான்சா நிறுவனம் வழங்கியது.
இதனை தொடர்ந்து. கடந்த யூன் 30ம் திகதி லூஃப்தான்சா விமான நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
அதில், விபத்தில் இறந்த ஜேர்மனி நாட்டை சேர்ந்த 72 பயணிகளுக்கு தலா 25 ஆயிரம் யூரோக்களும், பயணிகளது உடனடி குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு 10 ஆயிரம் யூரோக்கள் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.

இந்த அறிவிப்பிற்கு விபத்தில் இறந்த பயணிகளின் உறவினர்கள் கூட்டாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக உறவினர்களின் வழக்கறிஞர் பேசுகையில், விமான விபத்தின்போது பயணிகள் உறவினர்கள் அனுபவித்து வந்த துன்பம் சாதாரணமானது அல்ல.
தங்களது உறவினர்களை பிரிந்ததற்கும், அவர்கள் பட்ட துன்பத்தை ஈடு செய்யவும், உயிரிழந்த பயணிகள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சம் யூரோக்களும், அவர்களது உடனடி குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு அதே அளவு ஒரு லட்சம் யூரோக்கள் என மொத்தம் 2 லட்சம் யூரோக்கள் கொடுக்க வேண்டும் என லூஃப்தான்சா நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், வழக்கறிஞரின் கருத்தை ஏற்ற உயிரிழந்த பயணிகளின் உறவினர்கள், லூஃப்தான்சா நிறுவனம் அறிவித்துள்ள இழப்பீட்டு தொகையை ஏற்க மறுத்ததுடன், தங்களுக்கு 2 லட்சம் யூரோக்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என போராட்டத்தில் குதித்துள்ளனர்.

Related

உலகம் 5231896379154941954

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item