பொதுத் தேர்தல் தொடர்பில் 195 முறைப்பாடுகள் பதிவு
பொதுத் தேர்தல் தொடர்பில் 195 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. சட்டவிரோத நியமனங்கள், பதவி உயர்வுகள் மற்றும...
http://kandyskynews.blogspot.com/2015/07/195.html

பொதுத் தேர்தல் தொடர்பில் 195 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத நியமனங்கள், பதவி உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் குறித்து அதிகபடியாக 96 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
இதனைத் தவிர தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் காட்சிபடுத்தப்பட்டமை தொடர்பாகவும் தேர்தல்கள் செயலகத்திற்கு 24 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
வாக்காளர்களுக்கு பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டமை தொடர்பில் 23 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
அரச சொத்துக்கள் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் 22 முறைப்பாடுகளும், அரச ஊழியர்கள் பிரசார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டமை குறித்து ஆறு முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் அதிகபடியாக 22 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
இதனைத் தவிர ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 12 முறைப்பாடுகளும், பதுளை மாவட்டத்தில் 10 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate