மைத்திரியின் ஆலோசகராகும் மிலிந்த மொரகொட?
ஐக்கிய அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொடவை ஜனா...

http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_894.html

இது தொடர்பிலான கலந்துரையாடல் கடந்த 19ம் திகதி ஜனாதிபதிக்கும் மிலிந்த மொரகொடவிற்கும் இடையில் நடைபெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.
இவர்களின் நீண்ட கலந்துரையாடலில் லண்டனில் நடைபெற்ற புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புடன் மங்கள சமரவீரவின் பேச்சுவார்த்தை எவ்வாறு எதிர்வரும் பொது தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் என்பது பற்றி ஆராயப்பட்டதாகவும், ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் பிரித்தானியாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் கலாநிதி கிறிஸ் நோனிஸ், சட்டத்தரணி ஷிரால் லக்திலக்க ஆகியோர் ஏற்கனவே ஜனாதிபதியின் சர்வதேச ஆலோசகர்களாக செயற்படுகின்றனர்.
அவர்களுடன் மிலிந்த மொரகொடவையும் ஜனாதிபதியின் சர்வதேச ஆலோசகராக நியமிக்கவிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அல்லது தேசிய பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்திற்கு செல்ல ஏற்பாடு செய்யப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்காக தனியார் ஊடகம் ஒன்றின் உயர் அதிகாரி முன் நின்று செயற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.