ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்று அவசரமாக கூட்டம், மகிந்தவை விரட்டவா?

எதிர்வரும் பொதுத் தேர்தலை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பிளவுபடாது எதிர்கொள்வது குறித்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதன் கட்சித் தலைவர்க...

எதிர்வரும் பொதுத் தேர்தலை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பிளவுபடாது எதிர்கொள்வது குறித்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதன் கட்சித் தலைவர்கள் கூடி ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பொதுஜன ஐக்கிய முன்னணியில் போட்டியிட வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.

மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக நியமிக்க முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள நிலையில், இக்கூட்டத்தில் அது தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளது.

இதேவேளை, மஹிந்தவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக களமிறக்கினால் தமிழ் – முஸ்லிம் மக்களின் வாக்குளை எதிர்பாரக்க முடியாதென, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை கட்சிகள் சிந்தித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சமல் ராஜபக்ஷவை பிரதமர் வேட்டபாளராக பெயரிடுவது குறித்தும் பல கருத்துக்கள் வெளிவந்துள்ள நிலையில், அவ்வாறான ஒரு நிலையில் ஜனாதிபதியின் நிலைப்பாடு குறித்து இன்றைய கூட்டத்தில் பேசப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related

தலைப்பு செய்தி 5515323982242871288

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item