தென் கொரியாவிற்கு ஆந்த்ராக்ஸ் கிருமிகளை கப்பலேற்றியது அமெரிக்கா
உயிருடன் இருக்கும் ஆந்த்ராக்ஸ் கிருமிகள் பல்வேறு ஆய்வு மையங்களுக்கும், தென் கொரியாவில் உள்ள இராணுவத் தளத்திற்கும் கப்பலில் தவறுதலாக ஏற்றப்...
http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_166.html?m=0

இதனால், தென் கொரியாவில் உள்ள 22 அமெரிக்க இராணுவ அதிகாரிகளுக்கும் நோய்த்தொற்று ஏற்படாமல் இருப்பதற்கான தற்காப்பு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க இராணுவத்தின் தலைமையகமான பென்டகனிலிருந்து டெக்சாஸ், விஸ்கான்சின், நியூ ஜெர்ஸி, டென்னஸி, நியூயார்க், கலிபோர்னியா உட்பட 9 மாகாணங்களுக்கும் உயிருடன் உள்ள ஆந்த்ராக்ஸ் நோய்க் கிருமிகள் தவறுதலாக அனுப்பி வைக்கப்பட்டமை தெரியவந்திருப்பதாக பென்டகன் பாதுகாப்பு அமைச்சகமும் ஒப்புக்கொண்டுள்ளது.
கிருமி எடுத்துச் செல்லப்பட்ட பகுதிகளில் பரிசோதனை மையங்களை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் செயற்பாட்டில் நிகழ்ந்த இந்தத் தவறு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate