கோத்தபாய, பசிலின் கைதை தடுக்கும் சட்டமா அதிபர்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரை கைது செய்வதை தடுக்கும் நடவடிக்கைகள...

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரை கைது செய்வதை தடுக்கும் நடவடிக்கைகளில் சட்டமா அதிபர் யுவன்ஜன வனசுந்தர ஈடுபடுகின்றார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் பாரியளவில் ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கு முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதற்கான ஆதாரங்கள் காணப்பட்ட போதிலும் சட்டமா அதிபரும் திணைக்களமும் கைது செய்வதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அக்கறை செலுத்தவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர், பொருளாதார அமைச்சர், ஜனாதிபதியின் பாரியார், கடற்படைத்தளபதி, ஆகியோரும், பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் ஆகியோரை கைது செய்வதற்கு போதுமான அளவு சாட்சியங்கள் காணப்படுகின்றது.

ஊழல் மோசடிகள், கொலைகள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பில் சாட்சியங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விசாரணை அறிக்கைகள் சட்டதா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி ஆலோசனை கோரப்படும் பட்சத்தில் அறிக்கைகளுக்கான பதில்கள் கிடைப்பதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குற்றச்செயல்களில் ஈடுப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குற்ற புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Related

இலங்கை 6439188322270296915

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item