முன்னாள் உள்துறை அமைச்சர் தடுப்புக் காவலில்!!!

நிக்கோலா சார்க்கோசிக்கு மிகவும் விசுவாசமனவரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான Claude Guéant, கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டு ...






நிக்கோலா சார்க்கோசிக்கு மிகவும் விசுவாசமனவரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான Claude Guéant, கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார். சார்க்கோசி மீதான வழக்கிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் குடிவரவாளர்கள் மீது கடும் வெறுப்பை உமிழ்ந்தவரும், வெளிநாட்டழவர்களிற்கான வதிவிடஉரிமை பெறும் நடவடிக்கைகளில் கடும்போக்கைக் கடைப்பிடித்தவருமாவார்.



நிக்கோலா சார்க்கோசி, 2007ம் அண்டு ஜனாதிபதித் தேர்தலில், முறைகேடானதும் சட்டவிரோதமானதுமான நிதிகளைப் பெற்றதற்கான, வழக்கு விசாரணையின் தொடர்பாகவே இவரது கைது நடந்துள்ளது.

இவரின் வங்கிக் கணக்கில் வந்த ஐந்து இலட்சம் யூரோக்கள் பற்றி விசாரணையின் போது, தன்னிடமிருந்த இரண்டு பதினேழாம் நாற்றாண்டின், பிரபல ஓவியர்களின் புகழ்பெற்ற ஓவியங்கள் இரண்டை விற்றதன் அடிப்படையில் வந்த பணம் என இவர் கணக்குக் காட்டியிருந்தார். ஆனாலும் சர்வதேசச் சந்தையில்கூட இவர் விற்றதாகக் கூறப்பட்ட ஓவியங்கள் 140.000€ வினைத் தாண்டாது என, ஓவியங்களின் விலைமதிப்பை நிர்ணயிக்கும் Artprice உறுதிப்படுத்தித் தெரிவித்துள்ளது.

நிக்கோலா சார்க்கோசியின், 2007ம் ஆண்டின் தேர்தற் பிரச்சாரச் செலவீனங்களிற்காகவும், பின்னர் 2012ம் ஆண்டின் பிரச்சாரத்திற்காகவும் பயன்படுத்தப்பட்ட பணம், நிக்கோலா சார்க்கோசி, லிபியாவின் சர்வாதிகாரி முவம்மர் கடாபியிடம், கையூட்டாகப் பெற்ற பணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீடியாபார் (Mediapart) ஆவணங்களுடன் உறுதிப்படுத்தி இருந்தது. இதனை நிக்கோலா சார்க்கோசி மறுத்திருந்தாலும், இந்த ஆவணங்கள் குற்றவாளிக்கு எதிரான ஆவணங்களாக நீதிமன்றத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

«தன்னிலை மற்றும் பிறநிலை ஊழல்கள்»,«செல்வாக்கினை குற்றச் செயல்களிற்காகப் பயன்படுத்தியமை» ஆகிய குற்றங்களின் அடிப்படையில் 2013ம் ஆண்டிலிருந்து, நிக்கோலாசார்க்கோசி மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. மிகவும் திறமையும் பொறுப்பும் வாய்ந்த நேர்மையான நீதிபதிகளான Serge Tournaire, René Grouman ஆகியோரிடம் இந்த விசாரணைகள் 2013இல் ஒப்படைக்கப்பட்டது. இதனடிப்படையில் சார்க்கோசி மீதான பல வழக்குகள் விசாரணைக்காகக் காத்திருக்கின்றன.

நிக்கோலா சார்க்கோசி ஜனாதிபதியாக இருக்கையில், உள்துறை அமைச்சகத்தில், கைது செய்யப்பட்ட Claude Guéant விற்குப் பெருந்தொகைப்பணம் ஊக்கத்தொகையாக, வங்கி மூலம் வழங்கப்படாமல், சட்டவிரோதமாகப், பணமாகவே வழங்கப்பட்ட குற்றத்திற்காகவும், இவர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுச் சிறைத்தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என அரசதரப்பு வக்கீல் தெரிவித்துள்ளார். இந்தக் குற்றமும் நிக்கோலா சார்க்கோசியின் குற்றங்களில் தொடர்புடையதே!!!.


Related

உலகம் 3206180358106309146

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item