பிரான்சைத் தகர்த்தெறிவோம்- ஒன்றுகூடுங்கள் முஸ்லிம்களே!! - மீண்டும் ISIS பயங்கரவாதஎச்சரிக்கை!!
மீண்டும் இன்று இஸ்லாமியதேசம் என்னும் ISIS இனால் பிரான்சிற்கு ஓர் கடுமையான எச்சரிக்கை மற்றும் தாக்குதல் அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளது. Joué-...
http://kandyskynews.blogspot.com/2015/02/isis_5.html
மீண்டும் இன்று இஸ்லாமியதேசம் என்னும் ISIS இனால் பிரான்சிற்கு ஓர் கடுமையான எச்சரிக்கை மற்றும் தாக்குதல் அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளது. Joué-lès-Tours இல் டிசம்பர் இறுதியில் காவற்துறையினர் மீது நடாத்தப்பட் தாக்குதலில் கொல்லப்பட்டவரிற்கும் சார்லி கெப்தோ மற்றும் போர்த்-து-வன்சன் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிற்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாகப் பிரான்சின் மீது பாரிய தாக்குதலை நடாத்த உள்ளதாகவும் எச்சரித்துள்ளது.
தெளிவான சரியான பிரெஞ்சு மொழியில் விடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை, கையில் AK47 உடனும், சுற்றிவர ஒரு பெண் உட்பட ஆறு பயங்கரவாதிகளும் நிற்பவரால் இந்த அச்சுறுத்தற் காணொளி வெளியிடப்பட்டுள்ளது.
இதில் "பிரான்சிலிருக்கும் அனைத்து முஸ்லிம்களும் இஸ்லாமியதேசத்தில் இணைந்து கொள்ளுங்கள். வீரர்களே, வெளியில் இருப்பவர்களே, சிறைக்குள் இருப்பவர்களே உடனடியாக நடவடிக்கையில் இறங்குங்கள். பிரான்சின் மீது கடுமையான தண்டனை நிறைவேற்றப்படும். நீங்கள் வெளியேறவேண்டாம். கொல்லுங்கள். உங்களிற்கு நான்கு மில்லியன் இலக்குகள் உள்ளன" என, சார்லிகெப்தோ மீதான பயங்கரவாதப் படுகொலைகளை எதிர்த்து, 11ம் திகதி ஜனவரிமாதம் பிரான்சில் நடைபெற்ற, வரலாறு காணாத குடியரசுப் பேரணியில் கலந்து கொண்ட நான்கு மில்லியன் பேரையும் கொல்லும்படியும் இந்தக் காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கியால் பிரான்சுவா ஒல்லோந்திற்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. "பிரான்சில் தாக்குதல் நடாத்தியவர்கள் வருகின்றோம். தயாராக இருங்கள்" எனத் துப்பாக்கியைக் காட்டி இந்த எச்சரிக்கையைப் பிரான்ஸ் ஜனாதிபதிக்கு விடுத்துள்ளனர்.
ஏற்கனவே பல இஸ்லாமிய நாடுகளில் பிரான்சின் மையங்கள், தேவாலயங்கள் என்பனவற்றின் மீதும் தூதரகங்கள் மீதும் பயங்கரவாதிகளின் தூண்டுதல் மற்றும் மறைமுக ஆயுதவழங்கல்கள் மூலம் தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளன.
பயங்கரவாதத் தடைப்பிரிவினதும் உள்ளகப் புலனாய்வுப் பிரிவினதும் கடுமையான நடவடிக்கைகளால் பிரான்சில் பல பயங்கரவாத வலையமைப்புக்கள் முறியடிக்கப்பட்டு வருகின்றன. இதன் எதிரொலியாகச் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள், குலிபாலி, குவாச்சி சகோதரர்கள் போன்றவர்களிற்காகப் பழிவாங்கும் விதமாக விடப்பட்ட இந்த எச்சரிக்கைக் காணொளி தொடர்பான, கடுமையான விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன.