யாழ். உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படாது! - அமைச்சர் ஜோன் அமரதுங்க
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றப் போவதில்லை என சட்டம் ஒழுங்கு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஜோன் அமரத...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_87.html
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றப் போவதில்லை என சட்டம் ஒழுங்கு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். ‘இந்த உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுவது குறித்து வேண்டுகோள்கள் விடுக்கப்பட்ட போதிலும் இது குறித்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு யாழ் பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கோரப்பட்டுள்ளது. அவ்வாறு அகற்றினால் நாங்கள் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.
கொழும்பில் உயர் பாதுகாப்பு வலயங்கள் அவசியமற்றது. தற்போது நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தில்லை. உயர் பாதுகாப்பு வலயங்கள் காரணமாக மக்கள் ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு செல்லும் போது பல சிரமங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். அத்துடன் மேலதிக பாதுகாப்பு அவசியமில்லை என ஜனாதிபதியே தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கேட்டுக்கொண்டதற்கிணங்க வீதி தடைகளை பல அகற்றப்பட்டுள்ளன’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.