பிரபாகரனின் உதவியால் ஒரு முறை மஹிந்த என்னை வென்றார்: – ரணில் விக்ரமசிங்க
மஹிந்த ராஜபக்ஷ தன்னுடன் ஒருமுறையே தேர்தலில் போட்டியிட்டதாகவும், அதில் சுமார் ஒன்றரை இலட்சம் வாக்குகள் வித்தியாசத்திலேயே அவர் வெற்றி பெ...

http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_743.html
மஹிந்த ராஜபக்ஷ தன்னுடன் ஒருமுறையே தேர்தலில் போட்டியிட்டதாகவும், அதில் சுமார் ஒன்றரை இலட்சம் வாக்குகள் வித்தியாசத்திலேயே அவர் வெற்றி பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அதுவும் பிரபாகரனின் உதவியால் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோல் அவரை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டுவர சிலர் தயாராக இருப்பதாகவும், அதை தான் வெறுக்கவில்லை எனவும், அதன் ஆரம்பமே நுகேகொடை கூட்டம் எனவும் அவர் கூறியுள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட்டால், அவரைத் தோற்கடிக்கத் தான் தயார் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். வென்னப்புவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.